Monday, April 20, 2020

பசியும் கொல்லும்

லாக்டௌன் ஆன அன்றோ அதற்கு அடுத்தநாளோ அண்ணன் எஸ். அறிவுமணியின்,
“எல்லோரும்
எல்லாவற்றையும் நிறுத்துங்கள்
முதலில்
என் பசிக்கு
பதில் சொல்லுங்கள்”
என்று முடியும் கவிதையை வைத்திருந்தேன்
எல்லோரும் தனித்திருத்திருத்தல் மட்டுமே கொரோனாவை விரட்டும் என்று எழுதிக் கொண்டிருந்தபோது
அதற்கு அடுத்த நாள்,
“கொரோனாவும் கொல்லும்
பசியும் கொல்லும்”
என்று எழுதினேன்
வெகு சிலர் கொரோனாவைப்போலவே பசியும் சாவுகளைக் கொண்டுவரும் என்று எழுதத் தொடங்கினோம்
அப்போது இன்பாக்சிலும், அலைபேசி வழியாக அழைத்தும் நிறைய நண்பர்கள் என்னை அன்போடு கடிந்து கொண்டனர்
நாடு எவ்வளவு பெரிய சிக்கலில் கிடக்கிறது, இப்பவும் பசியும் சோறும்தானா?
என்றார்கள்
இல்லை, பசியும் கொல்லும்
கொரோனாவைவிட பசியின் பலி அதிகமாகும்போல தெரிகிறது
என்று நண்பர்களுக்கு சொன்னேன்
என்னைப்போல எழுதியவர்களுக்கும் இதுமாதிரி நிகழ்ந்திருக்கும்
அவர்களும் இதையேதான் சொல்லி இருப்பார்கள்
இப்போதும் சொல்வது இதைத்தான்
கொரோனோ மீது செலுத்தப்படவேண்டிய அதே அளவு கவனம் பசி மீதும் செலுத்தப்பட வேண்டும்

15.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...