Wednesday, April 22, 2020

இந்த மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது

தப்ளிக் மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள்தான் கொரோனாவை பரப்பினார்கள் என்று திரு நாராயணன் உள்ளிட்ட இந்துத்துவ குழுவினர் தொடர்ந்து புலம்பிக் கொண்டே இருந்தனர்
இப்போது காசிக்கு போய் வந்தவர்களுக்கும் தொற்று இருப்பது தெரிய வந்திருக்கிறது
சிவராத்திரிக்கு போய் வந்தவர்களையும் பரிசோதிக்க வேண்டும் என்பதும்
ராமர் ஆலய மண்பூஜைக்கு சென்று வந்தவர்களையும்
பெருங்கூடுகைகளுக்கு சென்று வந்தவர்களையும்கூட சோதிக்க வேண்டும்
அது ஒருக்கால் யாருக்கேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் அவர்களையும் அவர்களிடமிருந்து வேறு யாருக்கும் தொற்று ஏற்படாமலும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான்
இன்னொரு விஷயம்
தப்ளிக் மாநாடு சென்று வந்தவர்களில் தொற்று கண்டறியப்பட்டு
சிகிச்சைப் பெற்றுத் திரும்பியவர்கள்
ப்ளாஸ்மா செல்களை தருவதற்கு முன் வந்திருக்கிறார்கள்
ப்ளாஸ்மா செல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
அது தொற்று உள்ளவர்களை விரைவாக குணப்படுத்தும்
இப்போது
நாராயணன் அவர்கள் தப்ளிக் மாநாடு சென்று வந்தவர்களை
அவர்கள் தாமாகவே சிகிச்சைக்காக வந்ததற்காகவும்
ப்ளாஸ்மா செல்க்ளை அவர்கள் தர முன்வந்திருப்பதற்காகவும் பாராட்டுகிறார்
இவர்களது எம்பிக்கள் உள்ளிட்டு இவர்கள் போட்ட ஆட்டத்தில் அரபு நாடுகள் விழித்துக் கொண்டு பிரதமரை எச்சரிக்க ஆரம்பித்ததனால்கூட இந்த மாற்றம் இருக்கலாம்
காரணம் எதுவாயினும்,
இந்த மாற்றம் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது
திரு நாராயணான் சொன்ன காரணங்களையே எடுத்துக் கொள்வோம்
திரு நாராயணனுக்கு சொல்ல சில இருக்கின்றன
இஸ்லாமியர்கள் செய்த நல்லதுகளுக்காக நீங்கள் அவர்களைப் பாராட்டுவதாகவும் கொள்கிறேன்
எனில்
அவர்கள் நல்லது செய்கிறவர்கள், நல்லவர்கள் என்று தெரியாததால்தான் நீங்கள் அவர்களை சபித்துக் கொண்டும் தூற்றிக் கொண்டும் இருப்பதாகவும் கொள்ள வாய்ப்பிருக்கிறது
அவர்கள் செய்த தியாகத்தையும் நல்லதுகளையும் அறிந்து கொண்டால் நீங்கள் மனிதத் தன்மையோடு நடந்து கொள்வீர்கள் என்றும் தோன்றுகிறது
இந்த கொரோனா காலத்தில் சொந்தங்களே நிராகரித்த பல இந்து பந்தங்களின் உடல்களை இஸ்லாமிய சகோதரர்கள் சுமந்து வந்து புதைத்திருக்கிறார்கள்
வெள்ளம் காலத்தில் மசூதிகளில் இந்துக்கள் தங்குவதற்கு திறந்துவிடப்பட்டன
சீதக்காதி வரலாறுகளைப் படியுங்கள் திரு நாராயணன்
ராமேசுவரம் கோவில் கட்டமைப்பில் அவனது பங்கு குறித்து படியுங்கள்
சுதந்திரப் போராட்டத்தில்
பிரிவினையின் போது இங்குள்ள இஸ்லாமியர்கள் தங்களை இந்திய இஸ்லாமியர்களாகப் பாவித்து பாகிஸ்தானை நிராகரித்தது
இன்னும் இன்னுமாய் உள்ள வரலாறுகளைப் படியுங்கள்
இன்னொன்றையும் புரிந்து கொள்ளுங்கள்
உங்களைப் போன்றவர்களின் சாமிட்டத்திற்குப் பிறகும், ஆர்.எஸ்.எஸ் அட்டூழியங்களுக்குப் பிறகும் இஸ்லாமியர்கள் இந்த அளவிற்கு திடமாக இருக்க முடிகிறதென்றால்
உங்களைப் போன்ற சொற்ப அளவிலான இந்துக்களைத் தவிர்த்து பெரும்பாண்மை இந்துக்களின் ஈரமும் அன்புதான்
இந்த தேசத்தின் கட்டுமானம்
இந்திய மக்களின் ஒற்ருமையினால் எழும்பியது
பதட்டப் படாமல் படியுங்கள்
ஒருக்கால் உங்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் உண்மையானது என்றால்
வாசிப்பு உங்களை இன்னும் இன்னுமாய் மனிதனாக்கும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...