Monday, April 20, 2020

0002

நீங்களும் நானும் அவரும் இவரும்கூட பிணங்களாகியிருக்கக் கூடும்
கொஞ்சம்
அவர்கள் சுணங்கியிருந்தால்
நாம்தான் அவர்களிடம் போனோம்
நம்பினோம்
தொற்றகற்றும் கடவுளவர்கள் அவர்கள் என்று
தங்களைத் தொற்றும் என்பதறிவார்கள்
ஆனாலும் வைத்தியம் பார்த்தார்கள்
தொற்றளித்தோம்
நாம் பிழைத்தோம்
செத்தார்கள் அவரில் சிலர்
நன்றி செலுத்த வேண்டிய நேரம்
சுடுகாடு மறுக்கிறோம்
சுடுகாடும் இல்லை என்பதுணர்ந்தும்
பத்துமணிநேரம் முகக் கவசம் கழற்றாது தொற்றகற்ற உழைக்கிறார்கள்
மரணிக்கலாம் இவர்களில் சிலரும்
நாமும் சுடுகாட்டை அவர்களுக்கு மறுக்கலாம்

14.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...