04.04.2020 அன்று தனது பக்கத்தில் இந்தப் படத்தையும் செய்தியையும் வைத்திருந்தார் தம்பி ஸ்டாலின் தி
செய்தி இதுதான்
தனது காதலியான ரம்யாவுடன் கௌதமபிரியன் இரு சக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.
கௌதமபிரியன் ஒரு தலித்
ரம்யா இடைசாதியை சார்ந்த பிள்ளை
விசயம் தெரிந்ததும் ரம்யாவின் பெற்றோர் தங்களது உறவினர்களுக்கு தெரிவிக்கிறார்கள்
ஈஸ்வரன் என்ற ஏட்டையாவுடன் ஒரு பிரிவு அவர்களை மடக்குகிறது
ஈஸ்வரன் வெறுங்கைகளால் கௌதமபிரியனைத் தாக்குகிறார்
அதில்;கௌதமபிரியனின் முதுகு மற்றும் தோள்பட்டையில் மிகச் சன்னமான காயம் ஏற்பட்டு அதற்காக
அவர் செங்கம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக வைத்தியம் பெற்றிருக்கிறார்
30.03.2020 முதல் 02.04.2020 வரை தற்செயல் விடுப்பில் இருக்கும் ஈஸ்வரன் மீது வன்கொடுமைத் தடுப்பு பிரிவில் வழக்கு பதியப்பட்டிருக்கிறது
காவலர் ஈஸ்வரன் தலைமறைவாகி விட்டார் என்கிறது முதல் தகவல் அறிக்கை
நமக்கு இருக்கும் சில அய்யங்கள்
1) இப்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில் ஒரு ஏட்டையாவிற்கு எப்படி மூன்று நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டது
2) படத்தில் ஈஸ்வரன் கையில் இருக்கும் ஆயுதம் கம்பி போல் இருக்கிறது.
3) வெறுங்கையால் அவர் தாக்கியதாக வருகிறது முதல் தகவல் அறிக்கை
4) வெறுங்கையால் தாக்கினால் காயம் எப்படி வரும்?
5) தந்தை அம்பேத்கார் படத்தை கௌதமப்பிரியன் அணிந்திருந்ததுகூட ஈஸ்வரன் அவர்களது கோவத்திற்கு காரணாம் என்று சொல்லப்படுகிறது
அரசு கொரோனாவைவிடக் கொடியதாக இதைக் கருத வேண்டும் என்று கோருகிறோம்
பின் குறிப்பு: அங்கு நிற்பவர்களில் பெரும்பாலோர் ஏதோ ரசிக்கும் மனோபாவனையில் இருப்பது அந்தக் குற்றத்தைவிட பெரும் குற்றம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்