Monday, April 20, 2020

இதைக் கொண்டுபோவோம் தோழர்

காலச்சுவடு கண்ணன் அவர்களது மதம் சாய்ந்த பதிவொன்றின்மீது தனக்கேயுரிய விமர்சனத்தை தோழர் புலியூர் முருகேசன் வைத்திருந்தார்
திரு கண்ணனிடம் இதையன்றி வேறு நல்லதனத்தை எதிர்பார்த்துவிட முடியாது என்பதை அறியாதவரல்ல முருகேசன்
ஆனாலும் அவர்களது சுயரூபத்தை அம்பலப் படுத்தவும்
உயிர்கொல்லும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடத்திலும் கொஞ்சமும் ஈரமின்றி தங்களது மதவாத கோரமுகத்தைக் காட்டுகிறார்களே
என்று என்னைப்போன்ற அவரது தோழர்களிடம் கொஞ்சம் புலம்பி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்வதற்கான முயற்சி என்றுதான் அதை நான் கொள்கிறேன்
நாகர்கோவில் அரசு மருத்துவ மனையில் 16 பாசிடிவ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்கும் முகத்தான் அவர்களுக்கு வாசிப்பதற்கான நூல்களை வழங்குவதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து பெறுகிறார் கண்ணன்
அந்தப் பதினாறு பேரில் ஆறுபேர் நூல்கள் வேண்டாம் என்றிருக்கிறார்கள்
அதில் மூன்றுபேர் தம்மிடம் மதநூல்கள் இருப்பதால் அது போதும் என்று சொல்லி இருக்கிறார்கள்
இது அவர்களுடைய நம்பிக்கை என்ற பெயரிலான பழமைதோய்ந்த அடிப்படைவாதம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார் திரு கண்ணன்
இந்த இடத்திலேயே ஒரு கேள்வியை வைப்போம்
தலித் பெண் ( அவர் பஞ்சாயத்து தலைவர் என்றும் சொல்லப்படுகிறது) சமைத்த உணவை நாங்கள் சாப்பிடமாட்டோம் என்று மறுத்த பாசிடிவ் நோயாளிகளைப் பற்றி ஏன் எழுத மறுக்கிறார்?
மணப்பாறையில் தடை நேரத்தில் சாலையில் நடந்து கொண்டிருந்த ஒரு தம்பதிகளை காவலர் மறிக்கிறார்
நிறைமாதம்
சிசேரியன், ரத்தம் வேண்டும்
ஒரு வாகனத்தில் அவர்களை ஏற்றி மருத்துமனைக்கு அனுப்புகிறார் காவலர்
கொஞ்ச நேரத்தில் அந்த மருத்துமனைக்கு அந்தக் காவலர் போகிறார்
அவரது ரத்த வகைதான் அந்தப் பெண்ணுக்கும்
கொடுக்கிறார்
பெண் குழந்தை பிறக்கிறது
இந்த செய்தி அறிந்ததும் பெரிய அதிகாரிகள் அந்தக் காவலருக்கு பணப்பரிசு அளித்து பாராட்டுகிறார்கள்
அடுத்த நாள் அந்தத் தொகையை அந்தக் குழந்தையின் கைகளில் கொடுத்து வாழ்த்திவிட்டு வருகிறார். அந்தக் காவலர் ஒரு இஸ்லாமியர்
என்று ஒரு செய்தியை கீதா (Geetha Narayanan) பக்கத்தில் பார்த்தேன்
திருச்சியில் குணமடைந்து திரும்பிய ஜமால் முகமது கல்லூரியின் முன்னாள் முதல்வர்
மாவட்ட நிர்வாகத்தையும் மருத்துவர்களையும் அரசையும் மாச்சரியமற்ற அவர்களது சேவைக்காக வாழ்த்தியிருக்கிறார்
மருத்துமனைக்கு வெளியே இருப்பவர்கள் வேண்டுமானால் ”சிங்கிள் சோர்சிங்” என்றும் சிகிச்சைப் பெறுபவர்களின் மத அடிப்படைவாதத்தை அம்பலப்படுத்துகிற முயற்சியிலும் இருக்கட்டும்
நோயாளிகளுக்கு வைத்தியம் பார்க்கும் எவரிடத்தும்
ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள எவருக்கும்
அவர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிற எவருக்கும்
சத்தியமாய் மதம் இல்லை
இதைக் கொண்டுபோவோம் தோழர் முருகேசன்
இன்னும் உரத்து
இன்னும் அதிகமாய்

19.04.2020

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...