Monday, April 20, 2020

0001

பிடிக்காத கடவுளென்று யாருமில்லை
எமக்கு
பிடித்த கடவுள்,
பிடிக்காத கடவுள் என்பதெல்லாம்
கடவுளர்களின் தோற்றத்திற்குப் பிறகு
பரிசீலிக்கப்பட வேண்டியவை
ஒரு டசன் கடவுள்கள் தோன்றினாலும் தோன்றட்டும்
பிடித்தவர் பிடிக்காதவர் என்பதற்கு
அவரவர் செயல்கள் பார்ப்போம்
தமக்கான மதங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் அவர்கள்
இவ்வளவும் எதற்கென்றால்
இந்த நொடியில் கடவுளென்று எவரும் இல்லை
ரெண்டே பிரிவுதான் எமக்கு மக்களில்
நல்லவர் கெட்டவர்
நிறைவடையலாம் நீங்கள் சிங்கிள் சோர்ஸ் என்பதில்
தில்லியில் என்றாலும்
மத்தியப் பிரதேச பதவியேற்பு விழாவில் என்றாலும்
குஜராத்தில் என்றாலும்
கோவையில் என்றாலும்
தொற்று எம் எதிரி
தொற்றைப் பெற்றவர் எம் மக்கள்
எங்களை இப்படியே விட்டு விடுங்களேன்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...