ப்ரதாபன் ஜெயராமன்...
கண்ணுக்குத் தெரிய,
ஓய்வோ சலிப்போ இல்லாமல்
இடைவெளியும் இல்லாமல்
வளர்ந்து கொண்டே இருக்கிறான்
எதையும் சமரசமின்றி எதிர்கொள்பவன்
என்ன கொஞ்சம் முரடு
சமரசமற்ற முரடு
கொரோனா மீதான அரசின் நடவடிக்கைகளையும்
மதவாதிகளின் அயோக்கியத் தனத்தையும்
கொஞ்சமும் சமரசமின்றி மூர்க்கமாக எதிர்கொள்கிறான்
ஆனால்
எதிர்க்கிறோம் என்பதற்காக உண்மையை மறைப்பதில்லை
தினமும் தினமும் குணமடைந்தோர் விவரங்களை சொல்லி மக்களுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டே இருக்கிறான்
முந்தாநாள் தமிழ்நாட்டில் கொரானா பாதிப்பு 25
நேற்று 56
ப்ரதாபன் சொல்கிறான்
“இதை நேற்றைவிட இன்று அதிகம் என்று அச்சம் கொள்ள வேண்டாம்
நேற்று மதியமே முதல்வர் 25 என்று சொன்னதால் இரவும் அதையே கணக்காக எடுத்துக் கொண்டனர்
நேற்று மதியத்திற்கு மேல் கண்டறியப்பட்ட தொற்றுள்ளோரின் எண்ணிக்கையும் இன்றைய கணக்கில் சேரந்து விட்டது”
இதுதான் நேர்மை
பெருசா வா ப்ரதாபா
18.04.2020
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்