Thursday, April 23, 2020

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அவசியம் நடத்தியே ஆக வேண்டுமா?

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அவசியம் நடத்தியே ஆக வேண்டுமா?
”இது விஷயத்தில் ஆசிரியர்கள்,
நடத்த வேண்டும்,
நடத்தத் தேவை இல்லை
என்பதாக இரண்டாய் பிரிந்து நிற்கிறார்கள் ”
என்கிறார் எனக்கான ஆசான்களில் ஒருவரான தோழர் மாடசாமி (ச. மாடசாமி)
தேர்வு தேவையா? இல்லையா? என்ற கேள்வியே தவறுதான் என்பது,
“தேர்வை நடத்தியே தீர்வார்கள்” என்ற மணிமாறனின் (மணி மாறன்) ஒரு பின்னூட்டத்தின் வழி தெளிவாகிறது
நடத்தட்டும் நடத்தாமல் போகட்டும் நமது நிலையை நாம் சொல்லிவிட்டு போவதே சரியானது
ஒரு சன்னமான கேள்வியில் இருந்து இதைத் தொடங்கலாம்
இவ்வளவு கொடூரமான சூழலில் இந்தத் தேர்வை ஏன் நடத்த வேண்டும்?
தேர்வை நடத்தினால்தானே சார் அவன் பாசா பெயிலா தெரியும்?
சரி, அதத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறோம்?
என்ன சார், இப்படிக் கேட்டுட்டீங்க, பாசானாதானே அவன் மேல் படிப்புக்குப் போக முடியும்?
பத்தாங்கிளாஸ் பாசானா என்ன மேல் படிப்பு?
பதினொன்னங்கிளாஸ்,
அப்புறம்?
ITI,
அப்புறம்?
பாலிடெக்னிக்
இவ்வளவுதானே, இதுலயெல்லாம் இந்த ஆண்டு பத்தாங்கிளாஸ் படிச்ச எல்லோருக்குமான அனுமதி கொடுத்தால் என்ன?
எல்லோருமே தப தபன்னு சீட்டு கேட்பாங்களே சார்
கேட்கட்டுமே
எல்லோருக்கும் கொடுக்க முடியுங்களா?
அது சரி பரிட்சை எழுதி பாசாகி வந்தவங்க கேட்டா மட்டும் கேட்கிறவர்களுக்கு எல்லாம் கொடுத்துடுறீங்களா?
அதெப்படி சார்?
அப்ப என்ன செய்யறீங்க?
வடிகட்டி கொடுப்போம்
அப்படியே இப்பவும் கொடுத்துட வேண்டியதுதானே
மார்க் இல்லாம எப்படி சார் வடி கட்டுறது?
அப்ப வாய்ப்புக்கு அல்ல மதிப்பெண். வடிகட்டறதுக்குத்தான். அப்படித்தானே?
ஏதோ சின்னதா ஒரு தேர்வு வச்சு கொடுத்துட வேண்டியதுதானே
ஒன்னு தெரிந்துகொள்ளுங்கள் பத்தாம் வகுப்பு முடிக்கும் குழந்தைகளுள் ஏறத்தாழ 85 விழுக்காடு மேல்நிலை முதலாம் ஆண்டுதானே வருவார்கள்
ஆமாம் சார்
கொடுத்துடலாமே
எல்லோரும் பர்ஸ்ட் க்ரூப் கேட்டா
கொடுப்போமே
பத்தாங்கிளாசே பாசாக இயலாத புள்ளைங்களும் வந்துடுவாங்களே?
வரட்டுமே
அவன் பதினொன்னாங்கிளாஸ்ல பெயிலாயிடுவானே
ஆக பதின்னாம் கிளாஸ்ல பெயிலாகறவன் பத்தாங்கிளாஸ்லேயே பெயிலாக்கனுங்கறீங்க, அப்படித்தானே?
ரொம்பக் கொழப்புறீங்க சார்
இன்னும் கொஞ்சம் கொழம்புங்க சார். தெளிவு கிடைக்கும்
பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வேண்டாம் என்பது நமது பதினைந்து வருடக் கோரிக்கை.
+1, மற்றும் +2 வகுப்பு பாடத் திட்டத்தையும் தேர்வு முறையையும் செறிவாக்கினாலே போதும்
அதற்கான உரையாடலே இந்த நொடிக்கான தேவை

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...