எங்கள் பூமியெங்குமவர்கள்
அத்துமீறி நுழைந்தது
வெள்ளக் காலத்தில்
தூவப்படும்
உணவுப் பொட்டலங்களிப் போல்
குண்டுகளை வீசியது
விதவிதமாய்
எம் மக்களை
விருந்து தின்ற எமனுக்கு
செரிக்காமல் கசிந்த
ஏப்பத்தின் புளிவாடை
தேனெடுப்பது
ஆடு மாடு மேய்ப்பது
சுள்ளி பொறுக்குவது தவிர
வேறெந்த வேலையும் தெரியாத
வனத்தைத் தவிர
வேறு இடமறியாத
அப்பாவித் திரளை
ஆயுதப் பயிற்சி எடுக்கிறார்கள்
என்று அவன் சொன்ன பொய்
உலகச் சராசரிகள் உச்சுக் கொட்ட
உள்ளூர் சராசரிகள்
கைகள் தட்ட
பொழுதை போக்க
எங்கள் பெண்களை அவர்கள்
குதறிச் சுவைத்தது
களவு போன
எங்கள் வாழ்க்கையை மீட்க
ஆயுதமேந்துவதும்
மனித வெடிகுண்டாய் நாங்கள்
மாறுவதும்
எல்லாம் புரிகிறது
“தீவிரவாதிகளுக்கும்
ராணுவ வீரர்களுக்கும்
இன்று நடந்த சண்டையில்”
என்று
வாசிக்கப் படும்
செய்தியைத் தவிர
வேதனையை சொல்லியது வரிகள்
ReplyDeleteமிக்க நன்றி சீனி
Deleteதீவிரவாதி ஆவதற்கான காரணம் புரிகிறது ஐயா...
ReplyDeleteஆமாம் ஆமாம் . மிக்க நன்றி தோழர்
Deleteஎனக்கும் புரிகிறது...
ReplyDeleteமரத்துப்போன
இதயத்தை
வலுவிழந்த
நகங்களால்
பிராண்டுகிறது
கவிதை...
மிக்க நன்றி தோழர்
Deleteமிக்க நன்றி தோழர்
ReplyDeleteநாம் என்ன ஆயுதத்தை எடுக்கவேண்டும் என்பதை எதிரிகள் தானே தீர்மானித்தனர் !?
ReplyDeleteஎனது கவிதைகள் இதே சிந்தனையில்
http://makizhnirai.blogspot.in/2013/05/blog-post_6.html
http://makizhnirai.blogspot.in/2013/09/blog-post_18.html
நேரம் கிடைத்தால் படித்து கருத்துக்கூறுங்கள் தோழர் !
அவசியம் வாசிக்கிறேன் தோழர். மிக்க நன்றி
Delete