பொதுவாகவே வெப்ப நிலப் பரப்பில் குளிர் தேசத்துக்காரர்கள் தாக்குப் பிடிப்பது சிரமம். அதுவும் கோடை எனில் அக்கினிப் பூமியின் புத்திரர்களே சிரமப் படுவோம்.
இதே சமன்பாடு குளிர் பிரதேசத்திற்கும் பொருந்தும். கந்தக பூமியிலிருந்து போனவர்களால் அங்குள்ள கோடைக் குளிரையே தாக்குப் பிடிக்க முடியாது. குளிர்காலத்துக் குளிரை அங்குள்ளவர்களாலேயே தாக்குப் பிடிக்க முடியாது. அப்படியிருக்க உறைபனியும் நடுங்கும் குளிர் தேசத்திலிருந்து வந்த ஒருவருக்கு நமது தேசத்தின் கந்தகக் காடான இடையான் குடியின் கூதைக் காலமே கொதிக்கத்தான் செய்யும். ஆனால் ஐம்பத்திமூன்று கோடைகளை ஒருவித தவ உணர்வோடு கால்டுவெல் போப் வாழ்ந்திருக்கிறார். இடையான்குடி புழுதிக்கும் பேர்போனது. இன்னும் சொல்லப்போனால் சாலையை புழுதி மறைத்துவிடும். ஜீப்புகள் புழக்கத்திற்கு வந்த போது இடையான்குடி சாலைகளில் புழுதியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பனையோலைகளை போட்டு அதன் மேல் பயணித்திருக்கிறார்கள். அதுவும் போப் வந்த காலத்தில் அவையும் அவ்வளவாக இல்லாத காரணத்தால் குதிரைகளிலும் குதிரை வண்டிகளிலும்தான் பயணித்திருக்கிறார் என்கிறார் தோழர். தொ. பரமசிவன். மட்டுமல்ல, இதுபோன்ற இடங்களுக்கு வரும் மிஷினரிகள் மனிதர்களுக்கு ஞானஸ்தானம் கொடுப்பதைப் போலவே பூமிக்கும் கிறிஸ்தவத்தோடு தொடர்புடைய பெயரை சூட்டுவார்கள். ஆனால் கால்டுவெல் இடையான்குடி என்ற பெயரை மாற்றுவதற்கு எந்தவித முயற்சியும் முன்னெடுக்கவில்லை. ஏன் இவ்வளவு சிரமப் படவேண்டும். இதுமட்டும்தானா தெரியவில்லை. ஆனால் ஒரு காரணம் நெறுக்கமாகப் பொருந்திப் போகிறது. அவரது ஊரின் பெயர் shepherdyard. இதனைத் தமிழ்ப் படுத்தினால் இடையான்குடி என்று வரும். ஆக தன் சொந்த ஊரின் பெயரால் அமைந்த ஒரு ஊரில் இருப்பது அவருக்கு சொந்த ஊரில் இருக்கிற உணர்வைத் தந்திருக்கக் கூடும் இது உண்மை எனில், பெயரில் இருக்குதுங்க தோழர். |
முகநூலில் வாசிக்க
everything is in the name...
ReplyDeleteநிச்சயம் பெயரின் ஒற்றுமை
ReplyDeleteஒரு ஊக்கத்தைத் தந்திருக்கும்.
என்னவொரு ஒற்றுமை
நன்றி தோழர்
மிக்க நன்றி தோழர்
Deleteம்... "எல்லாமே" ஒன்று சேர்ந்து அமையவும் வேண்டும் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteநல்ல தகவல் இடையான்குடி குறித்து.. பொந்திதான் போகிறது தோழரே...!
ReplyDeleteமிக்க நன்றி சரவணன்
Delete.வித்தியாசமான பார்வை ஏற்க கூடியதாய்
ReplyDeleteஆஹா , மிக்க நன்றி கீதா
Delete