லேபில்

Saturday, February 15, 2014

63

தள்ளு வண்டியில்
வடை சுடுவதும்
சீனிச் செட்டியார் கடையில்
பொட்டலம் மடிப்பதும்
பாட்டா கடையில்
தாழ்த்தப் பட்டவன் காலுக்கு
செருப்பு அணிவிப்பதும்
போஸ்ட் மார்டம் செய்த
பிணத்திற்கு
துணி கட்டுவதும்

எல்லா தளங்களிலும்
நீக்கமற
நீ

தீட்டுப் படவில்லை
ஆகமம்

காயம்படாத
மனு

பிளந்துவிடாத
பிரளயம்

அர்ச்சனைக்கு
ஆள் மாறினால் மட்டும்
புட்டுக்குமாக்கும்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

2023 http://www.eraaedwin.com/search/label/2023