மனைவிக்கு
கிளிப் பச்சை
மகனுக்கு
பாசிப் பச்சை
மகளுக்கு
ஆலிவ் பச்சை
எனக்கென்னவோ
குதிக்காலிட்டுக் குந்தி
இடக்கை தரையூன்றி
துணித் திரி அடைத்த
அலுமினியத் தவளையிலிருந்து
கரித் துணியில்
நனைத்து
சுக்கான் தரைக்கு
அம்மா தீத்திய
பசுஞ்சானிப் பச்சைதான்
சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Delete