Wednesday, February 26, 2014

04


மலம் அள்ளுவதும்
கீழிறங்கி
சாக்கடை கசடள்ளி சுத்தம் செய்வதும்
என்னை எரித்த பிறகும் தொடருமானால்
இந்தக் கொடுமைக்கு எதிராக
சாராய நெடியும் கோவமுமாய்
கலந்து வரும்
அவனது கெட்ட வார்த்தைகளாகவும்
அவன் காறி உமிழும் எச்சிலாகவும்
மாறியிருப்போம்
என் கவிதைகளும் நானும்

4 comments:

  1. சுர்ரென்று தாக்கும் வரிகள்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete
  2. தங்களின் கோபம் நியாயமானதுதான் தோழர்.
    சுதந்திரம் பெற்று ஆண்டுகள் எத்தனை கடந்தென்ன,
    இந்த அவலம் இன்னும் நீங்கவில்லையே

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...