லேபில்கள்

Tuesday, February 4, 2014

நிலைத் தகவல் 25ஏர்டெல் சூப்பர் சிங்கர் வைல் கார்டிற்கு தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இப்ப எப்படி இருக்கு என்று கேட்டார்கள்.

உணர்ச்சி வசப்பட்டிருந்த நிலையில் இருந்த ஒவ்வொரு குழந்தையும் கண்கள் பனித்த நிலையில் ஒவ்வொன்றாய் சொல்கிறார்கள்.

அழகேசன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டிருந்தவர்களில் ஒருவர். அறுபதுக்கும் மேல் இருக்கும் அவரது வயது. சொன்னார்,

“ இன்றைய இசை பிரம்மாக்களும் இங்கே இருக்கிறீர்கள். நாளைய இசை பிரமாக்களும் இங்கே இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் இடையில் நின்று பாடுவதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு. மகிழ்ச்சியா இருக்கு.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தி அப்பாவும் இப்படித்தான்,இந்த காலத்து எழுத்தாளர்களுக்கும் நாளைய எழுத்தாளர்களுக்கும் இடையில சும்மா நின்னுகிட்டு இருக்கார்தானேடா என்றாள்.

அப்படியெல்லாம் இல்லடி லூசு. வேனா பாரேன் அப்பா எப்பவாச்சும் எழுதுவார்.

எழுதனும்.

முகநூலில் வாசிக்க

11 comments:

 1. விதையொன்று போட்டால் சுரை ஒன்ற முளைக்கும்?
  உங்கள் பிள்ளைகள் இத்தன்னை சுவாரசியமாய் பேசாவிட்டால் எப்படி?

  ReplyDelete
  Replies
  1. ஆஹா. மகிழ்ச்சியும் நன்றியும் தோழர்

   Delete
 2. முக நூலுக்கு செல்கிறேன் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தனபால்

   Delete
 3. சுவாரசியம்
  தங்கள் மகளல்லவா
  த.ம.3

  ReplyDelete
 4. படிப்பதற்கு ஆவலாக உள்ளது அக்கா

  ReplyDelete
 5. சூப்பர் சிங்கரில் திவாகருக்குப் பிறகு எனக்கு அழகேசன் ஐயாவைத்தான் பிடிக்கும்... நல்ல பதிவு. வாழ்த்துகள்!


  இது என்னுடைய வலைப்பக்க முகவரி... நேரமிருந்தால் வந்து பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்
  http://pudhukaiseelan.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. அவசியம் வாசிப்பேன் தோழர். மிக்க நன்றி தோழர்

   Delete
 6. நான் திவாகரைப் பற்றி எழுதியபோது, இவரைப்பற்றியும் எழுதமறந்த குற்றத்தை நினைவுபடுத்திவிட்டாய் எட்வின். மறக்கமுடியாத மனிதர் ஆர்வத்திற்கு வயது ஒரு தடையில்லை என்பதைச் செயலில் காட்டிய சிங்கர்! (சிங்கப் பாடகர்)

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா. எனக்கும் அவரை ரொம்பவே பிடிக்கும். மிக்க நன்றிங்க அண்ணா.

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

Labels