Saturday, February 15, 2014

60

சாதி மிதித்ததில்
உழைப்பை மதித்ததில்
சக மனிதனின் சோகத்தில்
கண்ணீரில்
கரைந்ததில்
சமூக விடுதலைக்கான களத்தில்
பலமுறை சிறைப் பட்டதில்
அப்படி இப்படியென்று ஏராள மேன்மைகளால்
அவர் அறியாமலும்
நானே அறியாமலும்
என்னுள் வளர்ந்திருந்த
அழகான அவர் பிம்பத்தை
அவரே உடைத்து
அம்மணமாய்
அருவருப்பாய் நின்றார்
அந்தக் குழந்தையின் கை அசைப்பை
அலட்சியப் படுத்திய
அந்தப் புள்ளியில்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...