அழுவான்...
தீபந்தொட்டு
கண்ணொற்றும் வேளை
சரியாய்
கூட்டிவர வேணும்
ஒதுங்கி
ஒண்ணுக்கிருக்க வைத்து
தூங்கித் தொலைக்கிறான்
பல நாளில்
டியூஷன் முடியுமுன்னே
ரொம்பக் கனப்பதால்
முடியவில்லை
தூக்கவும்
இழுத்துதான் போகிறேன்
ஒரு வழியாய்
பாதுகாப்பிற்காய்
என்னோடு அனுப்பப்படும்
தம்பியை
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்