Friday, February 21, 2014

நிலைத் தகவல் 29


மூவரின் விடுதலைக்காக மக்கள் தளத்தில், நீதி மன்றங்களில், சமூக ஊடகங்களில், சட்ட மன்றத்தில், பாராளு மன்றத்தில் உழைத்த அனைவரையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

எனக்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லை. இன்னும் சொல்லப்போனால் இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆனாலும் இதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட மகள் செங்கொடி உள்ளிட்ட அனைவரையும் நினைத்துக் கொள்கிறேன்.

குறிப்பாக திரு வை கோ, திருச்சி வேலுசாமி, மற்றும் சுதாங்கன் ஆகியோரை மிகுந்த நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன்.

ஆனால் இந்த நியாயமான போராட்டங்களை மதித்து இந்த அரசு எதுவும் செய்ய வில்லை என்பதையும் இது ஒரு நியாயமான மனிதனிடத்தில் இந்த வழக்கு போனதால் கிடைத்தது என்பதையும் நினைத்துப் பார்க்கிறேன்.

அதே நேரத்தில் இந்த மனிதனிடத்தில் இந்த வழக்கு போகும் நேரம் வரைக்கும் இத்தனைக் காலம் தூக்கிலிருந்து அவர்களைக் காப்பாற்றியது இத்தகைய போராட்டங்கள்தான் என்பதையும் நினைத்துக் கொள்கிறேன்.

கருத்துக்களையோ, போராட்டத்தின் நியாயத்தையோ உணர்கிறவர்கள் என்றால் கூடங்குளம் போராட்டத்தின் நியாயம் உணரப் பட்டிருக்கும். எவ்வளவு அழுத்தமான, நியாயமான, செறிவான போராட்டம். 150 ஆண்டுகளில் இப்படி ஒரு நியாயமான செறிவான , வன்முறை துளியுமற்ற போராட்டத்தை பூமி பார்த்ததில்லை.

மூன்று வேலைகளைத் தொடர்ந்து கையெடுத்தாக வேண்டும்,

1 இனி யாரையும் தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள அனுமதிப்பதில்லை. அதற்கான தயாரிப்பை நாம் கொண்டு சென்றாக வேண்டும். தன்னை மாய்த்துக் கொள்ளுதல் என்பது இனி போராட்ட வடிவமாக இருத்தல் கூடாது. இளைய உயிர்களின் முக்கியத்துவத்தை நாமும் உணர வேண்டும் , பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும்.

2 மரண தண்டனைக்கு எதிராக என்னென்ன வடிவங்களில் என்னென்ன செய்ய முடியுமோ அதை அது நடக்கும் வரைக்கும் தொய்வின்றி கொண்டு செல்ல வேண்டும்.

3 ராஜீவ் கொலை வழக்கினை மீண்டும் நியாயமான முறையில் வெளிப்படையாக நடத்த வற்புறுத்தி தொடர்ந்து இயங்க வேண்டும். அதை அமெரிக்க நாராயணன் பாஷையில் சொல்வதெனில் மக்கள் மன்றத்தில் நடத்தக் கேட்டு தொடர் இயக்கத்தை நடத்த வேண்டும்

முகநூலில் வாசிக்க
https://www.facebook.com/eraaedwin/posts/664884426886404?stream_ref=10

4 comments:

  1. /// நாமும் உணர வேண்டும் , பிள்ளைகளுக்கும் உணர்த்த வேண்டும். /// முதலில் இதைச் செய்ய வேண்டும் = பலவற்றையும்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete
  2. உங்களின் மூன்று கருத்துக்களும் இன்றைய காலத்தில் மிகவும் அவசியமான தீர்வு காணப்பட வேண்டிய கருத்துக்களாகும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அய்யா

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...