Thursday, February 6, 2014

நிலைத் தகவல் 26




December 27, 2013 · Edited 

இன்று என்கூடவே ஒரு குடும்பம் பயணம் செய்தார்கள். திண்டுக்கல் போய் வந்திருக்கிறார்கள் என்பது குழந்தைகளின் பேச்சிலிருந்து தெரிந்தது.

“ஃபோர்ட் ஸ்ட்ராங்கா இருக்கும்னுதானே மிஸ் சொன்னாங்க. திண்டுக்கல் கோட்டைய பொக்லைன்ல இடுச்சா உழுந்துடுந்தானே?”

காதுகளை கூர்மையாக்கினேன். தொடர்ந்தாள்,

“எப்படி ராஜால்லாம் சேஃபா இருந்தாங்க?”

பெரிசாய் இருந்தவன் பொறுப்பாய் சொன்னான்,

“அப்பல்லாம் பொக்லைன் இல்ல மாலா. ஒன்லி ஈட்டியும் நைஃபும்தான்”

“நைஃபால இடிச்சா வளஞ்சுடும்தானே...”

இப்படியாக எனது இன்றைய பயணம் ஆசீர்வதிக்கப் பட்டதாய் அமைந்தது.

சரியாய் இழுத்துப் பிடித்து இந்தப் பேருந்தில் ஏறுகிற கணக்காய் என்னை அனுப்பி வைத்த பர்வதாவிற்கு (Varthini Parvatha) நன்றி



முகநூலில் பார்க்க

6 comments:

  1. வணக்கம் ஐயா
    பிஞ்சுக்குழந்தைகளிம் கள்ளங்கபடமற்ற கொஞ்சும் மழலையை எங்களுக்கும் படிக்கத் தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  2. எப்போது ஐயா வந்தார்கள்...?

    முக நூலுக்கு செல்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. முகநூலில் இருக்கும் தேதியில்தான் தோழர்.

      Delete

  3. அவர்கள் சுயமாய் சிந்திக்க நாம் குறுக்கே இல்லாமல் இருக்க வேண்டும். குழந்தைகளின் சந்தேகங்களும் சில நினைப்புகளும் ஆச்சரியப் பட வைக்கும். மனம் நிறைய வைக்கும் இம்மாதிரிப் பயணங்கள் தொடர ...... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...