Wednesday, February 19, 2014

50

இது...

என் மகன் வீடு
அவன் நண்பர்களுக்கு

என் தங்கையின் வீடு
அவள் தோழியர்க்கு

என் மனைவியின் வீடு
அவர் அக்கா, அம்மா, மற்றும்
தோழியர்க்கு

என் வீடுதான்
இது
என் நண்பர்களுக்கு

தொண்ணுறு விழுக்காடு
இன்னமும்
கனரா வங்கியின் வீடு
இது

10 comments:

  1. அடடா...! முடிவில் இப்படியா...?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்

      Delete
  2. தோழரே
    தங்களின் நூலான
    எப்படியும் சொல்லாம்
    படித்து மகிழ்ந்தேன்.
    என் வலைப் பூவில்
    குறிப்பிட்டுள்ளேன் தோழரே
    http://karanthaijayakumar.blogspot.com/2014/02/blog-post_16.html

    ReplyDelete
    Replies
    1. படித்தேன். மிக்க நன்றி தோழர்

      Delete
  3. "எனக்கு வரும் கனவில்கூட கனரா வங்கி மேலாளர் வந்து கட்டத்தவறிய தவணைக் கேட்டு மிரட்டுகிறார்" என நீங்கள் ஒரு கூட்டத்தில் கூறியதையும் இக்கவிதைக்குள் இணைக்க இயலுமா தோழர்?

    ReplyDelete
  4. (த.ம.4) - நல்லவேளை, நீங்கள் ஒருவராவது வீட்டுக் கடன் கொடுத்த வங்கியின் பெயரை நினைவில் வைத்திருக்கிறீர்களே! நான் வங்கி மேலாளராக இருந்தபோது எவ்வளவோ பேருக்கு வீட்டுக்கடன் கொடுத்திருக்கிறேன். புதுமனைபுகு விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்க மறந்துபோய்விட்டதாய் ஆறுமாதம் கழித்துக் கூறியவர்கள்தான் அதிகம்! (2) விரைவில் உங்கள் வீட்டுக்கடன் அடைபட்டு, வீடு முழுமையாக உங்களுக்கே சொந்தம் என்ற நிலை ஏற்படவும், 'தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்றால்' என்ற வள்ளுவத்தை உணர்ந்திடவும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...