Wednesday, August 26, 2015

உறவை கொடையளிக்கும் சாலை

பன்னிரண்டு நாட்களாக தொடர்ந்து காலை வேளையில் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

போக இரண்டரை வர இரண்ரை என்று ஒவ்வொரு நாளும் ஐந்து கிலோ மீட்டர் நடக்கிறேன்.

சுடுகாடு தாண்டியதும் இரண்டு தாயார்கள் சொம்போடு கல்லெடுத்துப் போட்டு அதன் மேல் அமர்ந்து பேசியவாறே பால்காரருக்காக காத்திருக்கிறார்கள்.

ரோவர் ஆர்ச் முன்னால் பால்கடையொன்றில் ஒரு தோழர்  பால் அளந்தபடி இருக்கிறார்.

கிருஷ்ணா தியேட்டர் தாண்டி நடக்கையில் அந்த நேரமே குளித்து பட்டை அணிந்தபடி பால் சொம்போடு அந்தத் தோழரை எதிர் கடக்கிறேன்.

இப்போதெல்லாம் அந்தத் தாய்மார்கள் ஒரு புன்னகையை உதிர்க்கிறார்கள்.

பட்டை அணிந்த அந்தத் தோழரும் நானும் வணக்கத்தைப் பரிமாறத் தொடங்கியுள்ளோம்.

விரைவில் பேசிக் கொள்வோம்.

யார் சொன்னது ரத்தத்தில்தான் உறவு முகிழ்க்குமென்று?

அதிகாலைச் சாலை எனக்கிரு தாய்களையும் சகோதரனையும் கொடையளிக்கிறது.

யாரையேனும் ஒருவரை பார்க்க முடியாமல் போனால் அந்த நாள் முழுமை பெற மறுக்கிறது.

இடையில் நிற்காது நடை

4 comments:

  1. நடைப் பயிற்சி நன்மை

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்தான் தோழர். மிக்க நன்றி

      Delete
  2. நடை தொடரட்டும்
    ஆரோக்கியம் நிலைக்கட்டும்
    உறவுகள் பெருகட்டும் தோழர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்ற்ங்க தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...