Saturday, August 15, 2015

கடிதம் 04

அன்பின் தோழர்களே,
வணக்கம்.
நலமா?

அண்ணன் முத்து நிலவனுக்கு எதிரிகள் என்று யாரும் இருக்க முடியாது. அப்படியே இருந்தாலும் அண்ணனது இந்த இரண்டு குணங்களை அங்கீகரித்து கொண்டாடாமல் கடந்துவிட முடியாது.1) வஞ்சனையே இல்லாமல் வளர்த்து விடுவது
2) கஞ்சத்தனமே இல்லாமல் பாராட்டி வளர்ப்பது

ஒன்றுக்கும் ஆகாததைக் கூட ஊதிப் பெரிதாக்கி வளர்த்துவிடுகிறார் என்ற இவர்மீதான குற்றச்சாட்டிற்கு அஞ்சி இவர் மட்டும் திருந்தியிருப்பார் என்று சொன்னால் நானெல்லாம் ஆளாகியிருக்க முடியாது. எண்பதுகளின் தொடக்கத்தில் பச்சை மண்ணாய் இருந்த என்னுள்ளும் ஏதோ இருப்பதைக் கண்டறிந்து வளர்த்து விட்டவர்.

இன்றைக்கும்கூட விடுதலைத் திருநாள் வாழ்த்து கூறுகிற சாக்கில் இரண்டு இளைஞர்களை, அவர்களது சாதனையை நமக்கு பந்தி வைக்கிறார்.

புதுகைமுரளி அப்பாஸ் அவர்கள் இயக்கத்தில் தோழர் ராகவ் மகேஷ் அவர்கள் நடித்துள்ள “ நெய்ப்பந்தம்” என்ற குறும்படத்தை அறிமுகம் செய்து அதன்மூலம் ஆகஸ்ட் பதினைந்தை கௌரவப் படுத்தியிருக்கிறார். அந்தக் குறும்படம் பற்றி பிறகு எழுதுகிறேன்.

அந்தப் படத்தைப் பாருங்கள்
https://www.youtube.com/watch?v=4rLOV47nMeA

************************************************************************************************************************ 

ஆகஸ்ட் 15 என்றதும் பெயர் தெரியாது செத்துப்போன போராளிகளையே நான் நினைத்துக் கொள்வது வழக்கம். தோழர்கள் தமிழ்ச்செல்வன், சு.பொ. அகத்தியலிங்கம் போன்றோரிடமிருந்து அப்படிப் பட்டவர்களில் சிலரை அறிந்துகொள்ளும் வாய்ப்பு என்னைப் போன்றவர்களுக்கு கிடைத்தது.

இந்த விடுதலைக்காக பெயரற்றுச் செத்துப்போன ஒரு தாயய்ப் பற்றி தோழர் எஸ்.பி.செந்தில்குமார் தனது வலையான “கூட்டாஞ்சோறு” வில் பதிந்திருக்கிறார்.


பாரதியாரின் மிக நெருங்கிய நண்பரும், சொத்தை விற்றேனும் பணம் அனுப்பு, பத்திரிக்கை அனுப்ப வேண்டும் என்று பாரதியார் சொன்னவுடன் அப்படியே செய்த சீனி வரதன் அவர்களின் மனைவி பதம்சானி தாயாரைப் பற்றி எழுதியுள்ளார். பத்மசானி அவர்களைப் பற்ரி தரவு தேடி நீண்டு எழுதும் ஆசையை விதைத்திருக்கிறார். அந்தப் பதிவை வாசியுங்கள்.

http://senthilmsp.blogspot.com/2015/08/blog-post_15.html

6 comments:

 1. பகிர்வுக்கு நன்றி! சென்று பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete
 2. கவிஞர் ஐயாஅவர்களைப் பற்றிய தங்களின் கருத்தினை ஆமோதிக்கின்றேன் ஐயா
  இதோ இரு இணைப்பிற்கும் செல்கின்றேன்
  நன்றி தோழர்
  தம+1

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிங்க தோழர்

   Delete
 3. நான் எழுதிய பதிவை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே! பத்மாசனியை பற்றிய தகவல்களை சேகரித்து நீண்ட பதிவு எழுத இருப்பதற்கு வாழ்த்துக்கள்!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. நீண்டு எழுதும் ஆசியைத் தூண்டியிருக்கிறது உங்கள் எழுத்து. முடியுமா தெரியவில்லை தோழர்

   Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...