Wednesday, August 12, 2015

18 நீயுமில்லை... நானுமில்லை...

 “கார் துடைப்போம்செருப்பு துடைப்போம்மிட்டாய் மற்றும்  பிஸ்கட்  விற்போம்இப்படி எதையாவதுசெய்தால்தானே எங்களால் ஒரு வேளையாவது சாப்பிட முடியும் ” என்று பத்து வயதுகூட நிரம்பாத சிறுவன்ஒருவன் சொல்வதை சன்நியூஸ் தொலைக்காட்சியிலே பார்த்தபோது ஈரக் குலையே கலங்கிப் போனேன்.  பிஸ்கட் பாக்கட் வாங்கித்தரச் சொல்லியோஅல்லது நல்ல ஷூ வாங்கித் தரச் சொல்லியோ பெற்றோரிடம் வம்புசெய்ய வேண்டிய ஒரு குழந்தை ஒருவேளை சாப்பாட்டிற்காக கார் துடைப்பேன்செருப்பு  துடைப்பேன் என்றுசொல்வதைக் கேட்டபோது செத்தே போய்விடலாம்போல் இருந்தது.


சொன்னக் குழந்தை ஒரு பொலீவியக் குழந்தை என்பதோ  நான் பொலீவியன் இல்லை என்பதோ என் கண்கள் ஈரப்படுவதை தடுக்க முடியவில்லை. கண்கள் உடைப்பெடுக்க இரண்டு பிள்ளைகளைப் பெற்றவன் என்பதே போதுமானதல்லவா?

சே சுற்றிச் சுழன்று போராடிய பூமியில் ஒரு பத்து வயதுக் குழந்தை இப்படிச் சொல்லுமளவிற்கு அப்படி என்னதான்ஆயிற்று?

இதைவிட அடுத்தத் தாக்குதல் கொடுமையாக இருந்தது.

குழந்தைத் தொழிலாளாளர் முறையை பொலீவியா சட்டபூர்வமாக்கியிருக்கிறது என்கிற தகவல் விரைவுச்செய்தியாக சன் நியூஸ் தொலைக் காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது.

எவன் தெளித்த சாபம் தோழன் சே பெரிதும் நேசித்து ஆசீர்வதித்த அந்தப் பூமியை இவ்வளவு நாசப் படுத்தியது

இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் தொழுவம் போன்ற ஒரு இடத்தில் சே கிடத்தப் பட்டிருக்கிறார். அவருக்கு உணவெடுத்துக் கொண்டு ஒருமனிதர் வருகிறார். அவர்களுக்குள் நடந்த உரையாடலை இங்கு தருவது அவசியம் என்று படுகிறது.

உணவோடு ஒரு மனிதர் உள்ளே வருகிறார். அந்த பலவீனமான நிலையிலும் மிகவும் சிரமத்தோடு குரலுயர்த்தி அந்த மனிதனைப் பார்த்து கேட்கிறார்,

“நீங்கள் யார்?”

“நான் ஜூலியா கோர்ட்ஸ். இந்தப் பள்ளியின் ஆசிரியர்.”

“என்னது, பள்ளிக்கூடமா? இவ்வளவு மோசமான இடத்திலா பாடம் நடத்துகிறீர்கள். இங்கே அமர்ந்தா பச்சிளங் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள்?”

கால்களில் குண்டுகள் பாய்ந்த ரணங்கள்.இழுத்து வரப்பட்ட வலி. இதற்காகவெல்லாம் கலங்காத அந்த மனிதனின் கண்கள் இவ்வளவு மோசமான இடத்தில் குழந்தைகள் அமர்ந்து படிக்கிறார்களே என்பதற்காக கலங்குகின்றன.

சிறிது நேரம் கழித்து அவரே சொல்கிறார்,

“கவலைப் படாதீர்கள். ஒருக்கால் நான் பிழைத்திருந்து, புரட்சியும் வெற்றி பெற்றுவிட்டால் நல்ல பள்ளிக்கூடங்களைக் கட்டித் தருகிறேன்.”

தொழுவம் போன்ற இடங்களில் குழந்தைகள் படிப்பதையே தாங்கப் பொறுக்காது நல்ல தரமான பள்ளியும் தரமான கல்வியும் வேண்டி போராடிய சே வாழ்ந்த பூமியில்,

கல்வி கற்க வேண்டிய குழந்தைகள் ஒருவேளை சாப்பாட்டிற்காய் செருப்பைத் துடைப்பதையும்காரைத்துடைப்பதையும் சட்டபூர்வமாக்கியிருக்கும் அந்த அரசும்அரசியல் கட்சிகளும்தலைவர்களும் பெற்றோர்களும்நாசமாய் போகட்டும் என்று சபிக்கவும் இயலவில்லை.

பாலஸ்தீனத்தின் மீது மிருக வெறித் தாக்குதலை நடத்துமிஸ்ரேலுடனான தூதரக் உறவை துண்டித்துக் கொள்வதாக அறிவித்த மனித நேயமிக்க பொலீவியா இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வருகிறது எனில் எப்படியொரு மனவேதனையோடு அதை செய்திருக்கும்.

எப்படியோ தங்கள் குழந்தைகள் உயிரோடு இருக்க வேண்டும் என்கிற ஒரு சூழல் அவர்களுக்கு வந்ததைவிட என்ன ஒரு சாபம் இருக்கப் போகிறது என்று மனதுழன்றுகொண்டே  வந்திருந்த “மக்கள் போராளியை” எடுத்துவிரித்தால் யுனெஸ்கோ சொல்லியிருந்த ஒரு தகவலை அதிலொரு கட்டுரை பேசியது.

இதுவரை குழந்தைத் தொழிலாளிகளை அதிக அளவில் வைத்திருக்கும் நாடு ஆப்பிரிக்காஅந்தச் சாதனையைதற்போது இந்தியா முறியடித்துவிட்டதாக யுனெஸ்கோ கூறியுள்ளது

ஆகஅதிக அளவிலான குழந்தைத் தொழிலாளர்களைக் கொண்ட நாடு இந்தியா.

குழந்தைத் தொழிலாளர் முறையை கடுமையான சட்டங்கள் மூலம் தடை செய்துள்ள நாடு இந்தியா.குழந்தைகளை வேலைக்கு வைத்திருப்பதும்அனுப்புவதும் மட்டுமல்லகுழந்தையை பள்ளிக்கு அனுப்பாதபெற்றோரை குற்றவாளிகள் என்றே சொல்கிறது இந்தியச் சட்டம்.

தமிழ் நாடு போன்ற இடங்களில் பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகள் வேலைக்கு சென்றாலோபள்ளிக்குசெல்லாமல் வீட்டிலியே இருந்தாலோ கூட அதை தொலைபேசியில் சொன்னால் போதும் காவலர்களே அந்தக்குழந்தைகளை மீட்டெடுத்து வந்து அருகமை பள்ளிகளில் சேர்த்து விடுவார்கள்.

தொண்டு நிறுவனங்கள் இது விஷயத்தில் கடுமையாக முடுக்கிவிடப் பட்டுள்ளனஅவர்களின் செயல்பாடுகளும்மெச்சிப் பாராட்டும் படியாகவே உள்ளன.

பணி நிரவலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ளக்கூடாது என்பதற்காகவும்  ஆசிரியர்கள் மாணவர்களைத் தேடி அலைவதைப் பார்க்க முடிகிறதுஇந்தஆண்டுக் கோடையில் ஏறத்தாழ பதினைந்து நாட்கள் அருகில் உள்ள துவக்கப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு முடித்தமாணவர்களின் பட்டியலையும்நடுநிலைப் பள்ளிகளில் இருந்து எட்டாம் வகுப்பு முடித்த மாணவர்களின்பட்டியலையும் எடுத்துக் கொண்டு அவர்களின் வீடு வீடாக சென்று பள்ளியில் சேர்க்குமாறு நாங்கள்கேட்டிருக்கிறோம்.

நாங்கள் இது மாதிரி வீடு வீடாய்ப் போகும்போது பக்கத்தில் உள்ள வேறு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிஆசிரியர்களும் இதே பணியின் நிமித்தம் அலைவதையும் பார்த்திருக்கிறோம்.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில்  பள்ளி ஆசிரியகள் ஒரு துக்க வீட்டில் சந்தித்துக் கொண்டால்கூட மாணவர்சேர்க்கை பற்றியே பேசிக் கொண்டோம்.

இத்தனைக்குப் பிறகும் யுனெஸ்கோ அறிக்கையின்படி குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் இந்தியாமுதலிடத்தில் இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் என்ன?

மண்டை காய மனதுழன்று கொண்டிருந்த வேலையில்தான் அன்றைய நீயா நானாவில் தனியார்பள்ளிஆசிரியர்களுக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இடையிலான விவாதம் நடப்பதாகவும் பார்த்து எழுதுமாறும்எங்களது காக்கை ஆசிரியர் முத்தையா சொல்லவே பார்த்தேன்.

அந்த நிகழ்ச்சி தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசு பள்ளி ஆசிரியர்களும் சந்திக்கும் சில நுட்பமான சிக்கல்களைவெளியே கொண்டு வந்ததோடுகல்வி வணிகமானதால் விளைந்துள்ள சில நுட்பமான அவலங்களையும்அம்பலப் படுத்தியதுஅந்த வகையில் கோபிக்கும் ஆண்டனிக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம்.

இத்தனை செயல்பாடுகளைத் தாண்டியும் குழந்தைத் தொழிலாளிகள் அதிகப் பட்டுள்ளமைக்கான காரணங்களுள்மிக முக்கியமானது அருகமைப் பள்ளிகளின் போதாமைஎல்லா மாணவர்களும் படித்தே ஆகவேண்டுமெனில்அருகாமைப் பள்ளிகள் அவசியம்மாணவர்களின் எண்ணிக்கை போதுமான அளவில் இல்லை என்பதற்காகபள்ளிகளை மூடுவதென்பது நிச்சயமாக நிறுத்தப் பட வேண்டும்.

ஒரே ஒரு மனிதன் ஓட்டுப் போடுவதற்காக ஒரு வாக்குச் சாவடியை அமைத்து ஊழியர்களை நியமித்து தேர்தலைநடத்தியிருக்கிறோம்.

29.04.96 அன்று நடந்த தேர்தல்.

கோட்டயம் அடுத்துள்ள பம்பாடி என்ற இடத்தில் உள்ள “ சரங்காட்டு எஸ்டேட்” என்ற இடத்தில்தாசன் என்பவர்காவலாளியாக வேலை பார்க்கிறார்.அங்கு வேலை பார்த்துவந்த 350 பேரும் வேலைகளின் பொருட்டு வேறு வேறுஇடங்களுக்கு புலம் பெயர்ந்துவிட்ட நிலையில் இவர் மட்டுமே அங்கு தொடர்கிறார்.

போதுமான ஆட்கள் இல்லை என்பதால் “பெரம்பா” சட்டமன்ற தொகுதிக்காக அங்கு இருந்த வாக்குச் சாவடியை 15கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருந்த ஒரு வாக்குச் சாவடியோடு தேர்தல் ஆணையம் இணைக்கிறது.

தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் தனக்கு வாக்குச் சாவடி வேண்டும் எனக்கேட்டு போராடுகிறார்.

ஒரே ஒரு வாக்காளருக்காக ஒரு வாக்குச் சாவடியை தேர்தல் ஆணையம் அமைத்தது என்ற செய்தியை 30.04.96நாளிட்ட தீக்கதிர் சொல்கிறது.

இது அவரது உரிமைஅவர் பக்கம் நியாயம் இருக்கிறதுஅருகாமை வாக்குச்சாவடி இல்லாமல் போனால் ஒருவாக்காளன் வாக்களிக்க இயாமல் போகும்அது தவறு என்பதற்காக ஒரு வாக்குச் சாவடியையே தேர்தல்ஆணையம் நியமிக்கும் போது மாணவர்களின் எண்ணிக்கை குறைவதற்காக பள்ளிகளை மூடுவதும்,ஆசிரியர்களை பணிநிரவல் மூலம் வேறு இடங்களுக்கு மாறுதல் செய்வதும் நியாயம் இல்லை.

வாக்களிக்கும் உரிமையை ஒரு வாக்காளன் இழந்துவிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உணர்கிறபோதுஅதைவிட கொஞ்சமும் குறைந்தது அல்ல ஒரு மாணவனின் கல்வி பெறும் உரிமை என்பதை கல்வித்துறைஉணர வேண்டாமாஎன்பதை உணர்த்தத் தவறியது அன்றைய நீயா நானா?

நீயா நானா யார் சிறந்தவர் என்கிற ரீதியில் தனியார்பள்ளி ஆசிரியர்களும்அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஏறத்தாழசண்டையே போட்டுக் கொண்டதில் இன்றைக்கு கல்வி இப்படிப் போனதற்கான காரணிகளான தனியார் பள்ளித்தாளாளர்களும்தமிழை எங்கள் பள்ளியில் நடத்த மாட்டோம் உங்களால் இயன்றதைப் பார்த்துக் கொள்ளுங்கள்என்று அரசுக்கே சவால் விடுமளவற்கு அவர்களை வளர்த்தெடுத்துள்ள அரசு எந்திரமும் எளிதாகத் தப்பித்துக்கொண்டார்கள் என்பதை கோபி மற்றும் ஆண்டனி உணரவேண்டும் என்பதே நமது ஆசை.

கற்பிப்பதைத் தவிர்த்து ஆசிரியர்கள் என்ன என்ன வேலை பார்க்க வேண்டியுள்ளது என்பதையும் அவர்கள்அனுபவிக்கும் மன உளைச்சலையும் இந்த நிகழ்ச்சி வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்கிறஉண்மையை யாராலும் மறுத்துவிட இயலாதுதான்.

100 விழுக்காடு தேர்ச்சி, 1190 மதிப்பெண்கள் என்கிற இலக்கில் தனியார் சுயநிதிப் பள்ளிகள் நடத்தும் அயோக்கியத்தனங்கள் பலவற்றை இந்த நிகழ்ச்சி வெளிக் கொணர்ந்தது.

குறிப்பாக பெரும்பான்மையான சுயநிதிப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்புப் பாடங்களும், 9 ஆம்வகுப்புப் பாடங்களும்நடத்தப் படுவது இல்லை என்கிற உண்மை வெளியே வந்தது.

அண்ணா யுனிவர்சிட்டி நடத்திய தேர்வில் இஞ்சினியரிங் மேத்தமெடிக்ஸ் என்கிற பாடத்தில் பன்னிரண்டாம்வகுப்பில் கணிதத்தில் 200 கு 200 வாங்கிய மாணவர்களில் ஏறத்தாழ 80 விழுக்காடுபேர் தேர்ச்சி பெறவில்லை.அன்றைய துணை வேந்தர் மிகவும் நொந்து போனவராக மேல்நிலைக் கல்வியில் ஏதோ கோளாறு நடக்கிறதுஎன்பதாக சொன்னார்.

200 கு 200 வாங்கிய ஒரு குழந்தையால் எப்படி தேர்ச்சிபெற இயலாமல் போகும்?

அதே ஆண்டு அந்தத் தேர்வை எழுதிய கிஷோர் தேர்ச்சி பெறுகிறான். 200 வாங்கியவனே தேர்ச்சி பெறாத போதுஉதவி பெறும் தமிழ் வழிப் பள்ளியில் படித்த இவன் எப்படி  என்கிற எனது ஆச்சரியத்தை அவனே உடைக்கிறான்,

“ 11 ஆம் வகுப்பிலும் 12 ஆம் வகுப்பிலும் எல்லா சேப்டரையும் எங்க சார் நடத்தியிருக்கார் பாஅதுதான்என்கிறான்.

அரசுப் பள்ளிகளை கேவலமாக பேசிய தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கு ஒன்றைச் சொல்லவேண்டும்.

தனியார் பள்ளி என்பது ஒரு முதலாளிக்கு சொந்தமானதுஉங்களைப் பிடிக்கவில்லை என்றால் அடுத்த கணமேநீங்கள் வெளியேற்றப் படுவீர்கள்.எனக்குத் தெரிய ஒரு பள்ளியில் இந்த இரண்டு மாதங்களில் மட்டும் 7இயற்பியல் ஆசிரியர் மாற்றப் பட்டிருக்கிறார்.

இன்னொரு பள்ளியில் கோ ஆர்டினேட்டர் ஆங்கில ஆசிரியரை அழைத்து அந்த கெமிஸ்ட்ரி சார் மீது புகார் எதுவும்இல்லைதான் ஆனாலும் அவர் இங்கிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறதுஇன்று சாயந்திரம் ரிலீவ் ஆகச்சொல்லுங்கள் என்கிறார்அடுத்த நாளுக்கான வீட்டு வேலைகளைக் கொடுத்துவிட்டு நம்பிக்கையோடு மதியம்சாப்பிட வந்தவரிடம் இந்த தகவல் சொல்லப் பட்டதுஅவரது மனநிலை எப்படி இருந்திருக்கும்?

வெள்ளிக் கிழமை நேர்காணல்நிறைய சோதிக்கிறார்கள்திங்கள் பணியில் சேரச் சொல்கிறார்கள்ஒருநிறுவனத்தில் கணக்கராக வேலை பார்த்து வந்தவர் பணியை ராஜினாமா செய்துவிட்டு வருகிறார்எந்தக்காரணமும் இல்லாமல் அன்று மாலையே அவர்பணிநீக்கம் செய்யப் படுகிறார்.

பணிப் பாதுகாப்பு சுத்தமாக இல்லாத இடங்கள் சுயநிதிப் பள்ளிகள்.

ஒருமுறை என்னோடு பன்னிரண்டாம் வகுப்பு தாள் திருத்த வந்த ஒரு இளைய ஆசிரியன் தாள் திருத்தும்மையத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு என் மடியில்தான் இறந்தான்.

அவனது ஈமச் சடங்குகளை செய்வதற்குக் கூட தாள் திருத்திய நாங்கள்தான் வசூலித்து கொடுத்தோம்எந்தப்பணமும் , உதவியும் அந்த நிர்வாகம் தராத நிலையில் தாள்திருத்திக் கொண்டிருந்த நாங்கள் வசூலித்துத் தந்த1,06,000 தான் அந்த ஏழைக் குடும்பத்திற்கான உதவியாக அமைந்தது.

அன்றைக்கு அம்பலப் பட்ட இன்னொன்று , 97 விழுக்காட்டிற்கும் அதிகமான அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களதுபிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் உண்மைநம்பிக்கையோடு நமது குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் படிக்க வைப்போம்.

ஆகஎந்தத் தனியார் சுயநிதிப் பள்ளியும் உங்களது பள்ளியல்ல சுயநிதிப் பள்ளியில் பணியாற்றும் தோழனே,தோழியேஉங்களது உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கும் பணக்காரர்களின் சந்தை அவை.

தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்புநல்ல ஊதியம் போன்றவற்றிற்காக போராட வேண்டிய கடப்பாடுநமக்கிருக்கிறது.

அரசுப் பள்ளிதான் என் பள்ளிஉங்கள் பள்ளிநமது பள்ளிகல்வி இப்படி பாழ்பட்டு போனதற்கு நீயுமல்லநானுமல்ல காரணம்.

எல்லாப் பள்ளிகளும் அரசுப்பள்ளிகள். குழந்தைகள் பாதுகாப்பாய் நடந்து போய் வருகிற தூரத்தில் பள்ளிகள் என்று அரசிடம் கேட்டுப் போராட நமக்கு உரிமையிருக்கிறது.

கல்வி பொதுப் பட கரம் கோர்ப்போம். 

நன்றி : ‘ காக்கைச் சிறகினிலே’

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...