அன்பின் தோழர்களே,
வணக்கம்.
நலமில்லை. நலமா?
தொடர்ந்து வலைப் பக்கம் வர இயலவில்லை. கடந்த சில காலமாகவே மிகுந்த அசதியும், சில நேரங்களில் மயக்கமும் வருவதுமாக இருந்தாலும் அவற்றை அவ்வளவாக கவனத்தில் கொள்ளாமலும் கொஞ்சம் அசட்டையாகவும் இருந்து விட்டேன்.
கடந்த வெள்ளி இரவு தொடங்கி சனி மாலை வரை கடுமையான முதுகு வலி.
மருத்துவர் கோவத்தின் உச்சிக்கே போய்விட்டார்.
இதுவரை எப்படி மாரடைப்பு வரவில்லை என்பதே ஆச்சரியம் என்றும், ஒருக்கால் இதற்கு முன்னமே மைல்ட் அட்டாக் வந்திருந்தால் கூட அதை உணர்ந்துகொள்ள இயலாத நிலையில்தான் உடம்பு இருப்பதாகவும் கடிந்து கொண்டார். அப்படி எதுவும் நிகழ்ந்திருக்கவில்லை என்று சோதனைகள் உறுதிப் படுத்தி விட்டன.
அதனால் முழுமையான ஓய்வும் தூக்கமும் அவசியம் என்று சொல்லியிருக்கிறார். ஒருவாரமாக ஒழுங்காக இருக்கிறேன் என்பதை தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன்.
வாசிப்பு குறைந்திருக்கிறது. ஏற்கனவே பள்ளியில் உள்ள வேலைப் பளுவால் குறைந்திருந்த வாசிப்பை இது இன்னும் நகர்த்தியிருக்கிறது.
தோழர்களின் எழுத்தை குறிப்பாக அண்னன் நிலவன், கறந்தை ஜெயக்குமார், கீதா, முனைவர் ஜம்புலிங்கம், தோழர் காஸ்யபன், திண்டுக்கல் தனபாலன், காயத்திரி, மலர் தரு, தளிர் சுரேஷ் இன்னும் பலரது எழுத்துக்களை வாசிக்க இயலாதது கவலைக்குரியது. ஆனாலும் சேர்த்து வைத்து வாசித்து விடுவேன்.
இன்னொன்று அவசியம் அனைவரும் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்

அன்பருக்கு வணக்கம்..
ReplyDeleteநலம் தொடர் விளைகவே...
கடிதத்தோடு முடிவில் சொன்ன...
//இன்னொன்று அவசியம் அனைவரும் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்//
என்ற வரிகள் தங்களின் உயர்ந்த எண்ணத்தை பிரதிபலித்தது விரைவில் பூரண நலம் பெற்று வலையுலகம் திரும்பிட எமது பிரார்த்தனைகள்.
அன்பன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
தமிழ் மணம் 3
மிக்க நன்றிங்க தோழர்
Deleteஉடல் நலன் பேணுங்கள் நண்பரே! எழுத்தையும் வாசிப்பையும் எப்போது வேண்டுமானாலும் தொடரலாம்! சுவரை வைத்துத்தானே சித்திரம்! என்னை நினைவில் வைத்து பதிவில் சொல்லியமைக்கு நன்றி! நேற்று போட்ட பின்னூட்டம் காணவில்லை! அதனால் மறுபடி இந்த பின்னூட்டம்!
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteஎனது கருத்துரை வரவில்லையே....
ReplyDeleteதாமதத்திற்கு மன்னியுங்கள் தோழர்
Delete