Friday, August 14, 2015

கடிதம் 03

அன்பின் தோழர்களே,
வணக்கம்.

பேரதிகமாக தேறியிருப்பதாகவே தோன்றுகிறது. 480 என்றிருந்த சர்க்கரை அளவு 263 என்கிற நிலைக்கு வந்துவிட்டது. ஏறத்தாழ 90 விழுக்காடு முதுகு வலி காணாது போனது. நிறைய தோழர்கள் அலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும், முகநூல் குறுஞ்செய்தியிலுமாக விசாரித்தபடி இருக்கிறார்கள். அனைவருக்கும் என் அன்பும் நன்றியும். பையப் பைய வாசிக்க முடிகிறது.

இரண்டு விஷயங்கள் குறித்து பேசவேண்டும்.

1) புதுக்கோட்டையில் நடைபெற உள்ள வலைப் பதிவர் சந்திப்பு.
2) “புதிய தரிசனம்” இதழில் எழுதிக் கொண்டிருந்த “ வலைக்காடு” தொடரை மீண்டும் வலையில் தொடர்வது.

இ. புதுகை வலைப்பதிவர் சந்திப்பு
***********************************

வலைப் பதிவுகள் வருங்காலத்தைத் தீர்மானிக்கிற சக்திகளுள் முக்கியமானதொன்றாக இருக்கும் என்று மிக உறுதியாய் நம்புபவன் நான். சமூக அக்கறையும் எழுத்தும் கைவரப் பெற்ற பதிவர்களை ஒருங்கிணைப்பதும் நெறிப்படுத்துவதும் மிக அவசியம் என்று நினைக்கிறேன்.

கடந்த காலங்களில் பல சந்திப்புகள் நடக்கவே செய்துள்ளன. அனாலும் ஒரு கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கக் கூடிய மக்கள் சக்தியின் ஒருங்கமர்வாக, நன்கு செதுக்கப் பட்ட வடிவமைப்பாக ஒரு சந்திப்பின் அவசியத்தைப் பேசுகிற இடமெங்கும் பேசியே வருகிறேன்.

ஒரு மாநில அமைப்பாக இந்தச் சக்தியை மாற்றவேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.

புதுகை சந்திப்பிற்கான திட்டமிடல்களைப் பார்க்கும்போது அப்படிப் பட்ட கனவினை செயல்படுத்தும் கவனம் அவர்களுக்கு இருப்பதாகவே படுகிறது. நிச்சயமாய் பத்தோடு பதினொறாய் இது முடியப் போவது இல்லை என்றே நம்புகிறேன்.

எனது மேடை குருநாதரும் வழிகாட்டியுமான அண்ணன் முத்துநிலவன் அவர்கள் முன்கை எடுத்திருக்கிறார்கள் என்பதே என் நம்பிக்கையை வலுப்பெறச் செய்கிறது. அவரோடு தோழர்கள் கஸ்தூரி ரெங்கன், வைகறை வைகறை, கீதா போன்றோர் சுழன்றடிப்பதைப் பார்த்தால் மகிழ்ச்சி அப்பிக் கொள்கிறது. எனது சர்க்கரையை சரி பாதியாய் குறைத்ததில் இவர்களது இந்த முயற்சிக்கும் நிச்சயமாய் பங்குண்டு.

நிச்சயமாய் அந்த கூடலில் ஏதோ ஒரு மூலையில் நானும் அமர்ந்திருப்பேன்.

இது குறித்து தொடர்ந்து எழுத உள்ளேன்.

அண்ணன் நிலவனுக்கும் மற்ற தோழர்களுக்கும் என் அன்பும் மரியாதைகளும்.


2 வலைக்காடு
***************

ஏற்கனவே நல்ல வலைகளைப் பற்றி (17 வலைகள்) ”புதிய தரிசனம்” இதழில் “ வலைக்காடு” என்று தொடராக எழுதினேன். வேலைப் பளு காரணமாக தொடர முடியாமல் போனது.

இவர்களது சந்திப்பிற்கான ஏற்பாடு தந்த உற்சாகத்தில் அதை மீண்டும் தொடர உள்ளேன். எந்தக் கால நிர்ணயமும் இல்லாமல் அவ்வப்போது எழுதலாம் என்றிருக்கிறேன்.

இந்த முயற்சிக்கான எனது நன்றிக் கடனாக புதுகைத் தோழர்களின் வலைகளுக்கு முன்னுரிமை கொடுக்க இருக்கிறேன். அண்ணன் நிலவனது வலையிலிருந்து தொடங்க இருக்கிறேன்.

புதுகை வலைகளை என் கவனத்திற்கு கொண்டு வருமாறு புதுகை தோழர்களை அன்போடு கேட்கிறேன்.

வலைக்காட்டில் கூடு கட்டியுள்ள வலைப் பறவைகளை தரிசிக்க...
http://www.eraaedwin.com/search/label/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

4 comments:

  1. முந்தைய பதிவில் கூறியதைத் திரும்பக் கூறவிரும்புகிறேன். உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். பையப் பைய வாசித்துக்கொண்டு எழுதுவதை தங்கள் எழுத்து உணர்த்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தோழர். பேரதிகமாய் கவனம் செலுத்தி வருகிறேன் தோழர்

      Delete
  2. உடல் நிலை சீராகி வருவது அறிந்து மகிழ்கின்றேன் ஐயா
    ஆனாலும் இனி உடல் நிலையில் அதிக கவனம் செலுத்துங்கள் ஐயா
    ஒரு குறிப்பிட்ட வயதுவரை,நாம் சொல்வதை நமது உடல் கேட்கும் என்பார்கள்,
    ஆனால் நாமோ, நம் உடல் சொல்வதைக் கேட்கின்ற வயதில் இருக்கின்றோம்
    நன்றி தோழர்

    ReplyDelete
    Replies
    1. இப்போது மிகுந்த கவனம் குவிக்கிறேன் தோழர்

      Delete

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...