எடுத்துக் கொடுப்பது என்பது அபூர்வமான கலை. எடுத்ததில் எதைக் கொடுப்பது என்பதும் எப்போது கொடுப்பது என்பதும் படைப்புக் கலையின் ஆக முக்கியமான பகுதி. அந்தக் கலை மிக லகுவாக வருகிறது தோழர் பூங்கொடிக்கு (Poongodi Poongodi). கல்வித்தளத்தில் இயங்குபவர்களுக்கும், அதை இயக்குபவர்களுக்கும் எப்போதும் தேவைப்படுகிற ஐன்ஸ்டின் சொன்ன ஒரு விசயத்தை அவர் தேவையான நேரத்தில் எடுத்துக் கொடுத்திருக்கிறார். அவரும் ஒரு ஆசிரியை என்பதால் மகிழ்வும் நம்பிக்கையும் பெருகுகிறது.
வாழ்த்துக்கள் பூங்கொடி.
”தண்ணீர் ராஜ்யத்துக்கு மீன்தான்
சக்கரவர்த்தி,அதற்கு மரம் ஏறுவதுதான்
கல்வி எனக் கட்டாயப் பயிற்சி கொடுத்தால்
தன் வாழ்நாள் முழுவதும் அது தன்னை
திறமையில்லாத முட்டாளாகவே கருதும்”
சக்கரவர்த்தி,அதற்கு மரம் ஏறுவதுதான்
கல்வி எனக் கட்டாயப் பயிற்சி கொடுத்தால்
தன் வாழ்நாள் முழுவதும் அது தன்னை
திறமையில்லாத முட்டாளாகவே கருதும்”
தொடர் பதிவுகள். ஒவ்வொன்றும் வித்தியாசமான நிலையில். நன்றி.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteபொட்டில் அறைந்தாற்போல என்று சொல்வார்களே
ReplyDeleteஅது இதுதான் தோழர்
அருமை
பூங்கொடி போற்றுதலுக்கு உரியவர்
நன்றி
தம +1
மிக்க நன்றிங்க தோழர்
Delete