தருமபுரி சம்பவத்தின் போது சென்னை இக்ஷா அரங்கில் “விடுதலை குயில்கள்” சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் தோழர் திருமாவளவன் அவர்கள் மிகுந்த நிதானத்தோடும், பக்குவத்தோடும் அதே நேரம் மிகுந்த ஆழத்தோடும் கூடியதொரு மிகச் சரியான உரையினை நிகழ்த்தினார்.
மட்டுமல்ல, அது போதும் அதன் பிறகும் மிகுந்த நிதானத்தோடு கூடிய அவரது அணுகுமுறையை நான் மிகுந்த நன்றியோடு கவனித்து வருகிறேன்.
அவர் கொஞ்சம் பதறியிருந்தாலும் நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்குமென்பதையும் நான் அறிவேன்.
அவர்மீது தாக்குதலைத் தொடுப்பதற்கு தயாராகியிருக்கிறார்கள் எனில் மிகுந்த எச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
இந்த செயலின் ஆணிவேரின் அடிநுணியின் முகவரியையும் அது குடிக்க நீராதாரம் எந்த வீட்டிலிருந்து வந்தது என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும், அம்பலப் படுத்த வேண்டும், தண்டிக்க வேண்டும்.
தோழர் பதறிவிடாமலும் தனது தோழர்கள் பதறாமல் பார்த்துக் கொள்ளவும் வேண்டும்.
ஆயிரம் வேறுபாடுகள் அவரோடு இருந்தாலும் இந்த நேரத்தில் அவரோடு இரண்டு வார்த்தை பேசிவிட ஆசை. எண் தந்து உதவுங்கள்.
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்