அன்பின் தோழர்களே,
வணக்கம்.
நலம். நலம்தானே?
மீண்டும் மீண்டும் இந்தப் பக்கம் வரவிடமல் ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருக்கிறது. இந்தமுறை தடுத்தது மாமனாரின் மரணம்.
அவரது மரணம் இந்தச் சமூகத்தையோ, ஊரையோ, அல்லது தெருவையோ பாதிக்கக்கூடிய பெரும் இழப்பில்லை. ஆனால் குடும்பத்தையே உலகமாக பார்த்த அந்த எளிய மனிதனின் மரணம் எனக்கான மிகப் பெரிய இழப்பு. போன ஞாயிறு அவர் திருச்சி KMC மருத்துவ மனைக்கும் நான் பெரம்பலூர் ராஜா முகமது மருத்துவ மனைக்கும் போகிறோம். இருவரையுமே மருத்துவர்கள் அட்மிட் ஆகச் சொல்கிறார்கள். இருவரையுமே ஒரே நேரத்தில் வைத்துப் பார்த்துக் கொள்வதற்கு ஆள் பஞ்சம். எனவே அவர் அட்மிட் ஆவதென்றும் நான் வீட்டிலேயே தங்குவது என்றும் முடிவெடுக்கிறோம். அவரது உடல் பலவீனத்தின் தீவிரமும் இதற்கான காரணம்.
ஐந்து மகள்கள், ஆறாவதாய் ஒரு மகன். ஆறு பேருக்கும் திருமணம் முடித்த பின்பும் அந்தச் சாதாரண போக்குவரத்து ஊழியருக்கு எந்தக் கடனும் இல்லை. அப்படி ஒரு சிக்கனம், அப்படி ஒரு திட்டமிடல்.
பொதுத் தளத்தில் அவரைப் பற்றி வைப்பதற்கு ஒரு விஷயம் இருக்கிறது. அவரது வீட்டில் எந்த இடத்தில் ஒரு குடம் தண்ணீரை ஊற்றினாலும் சொட்டுத் தண்ணீர் வீணாகாமல் ஏதோ ஒரு மரத்திற்கு ஓடிவிடும். அப்படி ஒரு நீர் மேலாண்மை.
என்ன சொல்ல?
போய் வாருங்கள் அப்பா.
தங்களது மாமனார் மரணம். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteநீர் சிக்கனம் கடைபிடித்த அந்த மனிதரின் ஆன்மா சாந்தியடையட்டும்!
ReplyDeleteஎந்த எளிய மனிதரிடமும் எடுத்துக் கொள்ள ஏதோ இருக்கும். இவரிடம் இது
Deleteஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteஉங்கள் உடல் நலம் தேவலாமா. மாமனார் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteவணக்கம் அய்யா. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. மிக்க நன்றிங்க அய்யா.
Deleteநிறைவான வாழ்க்கை வாழ்ந்தார் என்று மனதில் இருத்திக்கொள்வோம். ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteமிக்க நன்றிங்க அய்யா
Deleteஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் தோழர்
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Deleteஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ReplyDeletekalakarthik
மிக்க நன்றிங்க தோழர்
Delete