காக்கையை ( Kaakkai Cirakinile) ஆரம்பித்து ஏழு ஆண்டுகள் ஆயிற்று.
ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன்,
2011 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நாளன்று சென்னை இக்சாவில் வைத்து காக்கையை வெளியிட்டபோது இவ்வளவு காலம் காக்கையை கொண்டுவர முடியும் என்று நாங்கள் கருதவில்லை
மாற்றிதழின் வாழ்நாளைப் பொறுத்தவரை "செந்தூரம்" இதழை வெளிட்டு அதன் ஆசிரியர் செந்தூரம் ஜெகதீஷ் சொன்னதுதான் சாசுவதம். அன்று அவர் சொன்னார்,
"இந்த இதழ் நிச்சயம், அடுத்த இதழ் லட்சியம்"
இதைத்தான் காக்கை வெளியீட்டு விழா அன்றும் குறிப்பிட்டேன்.
ஆனால் காக்கையின் 85 வது இதழ் அச்சுக்குப் போயிருக்கிறது
நிறைய எழுத்தாளர்களை காக்கை வழி அறிமுகம் செய்திருக்கிறோம்
நிறைய படைப்பாளிகளுக்கு காக்கை இளைப்பாற இடம் தந்திருக்கிறது
வாசகர்களை ஏமாற்றாமல் இயன்றவரை தரமாய் வழங்க முயற்சித்திருக்கிறோம்
விளம்பரங்கள் கிடைக்கவில்லை
நியாயமான முறையில் எவ்வளவோ முயன்றும் நூலக வாசலை எங்களால் எட்ட முடியவில்லை
எந்தவிதமான உதவிக்கும் ஊழியர்களை வைத்துக் கொள்ளுமளவு வசதி இல்லாததால் எல்லா வேலைகளையும் நாங்களேதான் பார்க்கிறோம்
உண்மையை சொன்னால் நமது அலுவலகத்தில் போர்டுகூட இல்லை
ஆனாலும் மாதாமாதம் காக்கையை சரியாகக் கொண்டுவந்து உங்களிடம் சேர்க்கிறோம்
போகிற இடமெல்லாம் நண்பர்கள் கொண்டாடுகிறார்கள். நேற்று பாண்டியில் ஒரு கூட்டம். உள்ளே நுழைந்ததும் தோழர் Jk தன்னை அறிமுகம் செய்து கொண்டதும் அறிவுறுவோன் அவர்களையும் உங்களையும் சந்திக்க வேண்டும் என்றிருந்தேன். என்கிறார்
காக்கை படைப்பாளிகளை கொண்டு சேர்க்கவும் செய்கிறது
எல்லாம் சரிதான்
மகிழ்ந்து கரைகிறோம்தான்
ஆனாலும் நண்பர்களே
நிதிச்சுமை கடுமையாக உள்ளது.
கடன் சுமை கவலை தருகிறது
இதழ் தொடர்ந்து வேண்டுமெனில் சந்தா அவசியம்
இதுவரை சந்தா செலுத்தாத நண்பர்கள் இரண்டாண்டு சந்தா 500 ரூபாய் அனுப்பிவிட்டு எனக்கும் தகவல் தாருங்கள்
இதை உங்களிடம் கேட்கும் உரிமை எனக்கு உண்டு
A/c Name ..kaakkai
A/c No .. 60111010005660
IFSC . . Synb0006011ede
Bank. .syndicatebanks
Triplicane
.. chennai 600005
A/c No .. 60111010005660
IFSC . . Synb0006011ede
Bank. .syndicatebanks
Triplicane
.. chennai 600005
Address. Naakkai
288dr nadesanroed.triplican
Chennai.5
288dr nadesanroed.triplican
Chennai.5
#சாமங்கவிய ஒரு மணி 21 நிமிடம்
This comment has been removed by a blog administrator.
ReplyDelete