Friday, September 28, 2018

நமக்கு நம் மொழி என்றால் அவர்களுக்கு அவர்கள் மொழி

பத்து முறையேனும் இதை இதுவரை முகநூலில் பதிந்திருப்பேன்
தேவைப்பட்டால் இன்னும் லட்சம் முறைகூட பதிவேன்
இப்போது இதைப் பதிய வேண்டிய தேவையை தோழர் சீமான் கொடுத்திருக்கிறார்
தொன்னூறுகளின் துவக்கத்தில் சென்னை கிருஷ்ணகான சபாவில் தமுஎச வின் மாநிலமாநாடு நடைபெற்றது.
அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவர் திரு பாலுமகேந்திரா
அவர் தமது துவக்க உரையில்,
"all mothers are great, but my mother is the greatest" என்று கூறினார்
இதை இப்படியும் பெயர்க்கலாம்,
"எல்லா தாய்மார்களும் வணங்குவதற்குரியவர்கள்தான்
ஆனால் என் தாயோ
எல்லா தாய்மார்களும் எழுந்து நின்று
வணங்குவதற்குரியவள்"
இதை நமது தாய்மொழியோடு பொருத்தி பெருமை கொள்ள எல்லா உரிமையும் நமக்கு உண்டு
அதேவேளை நாம் நம் மொழியோடு இதைப் பொருத்திப் பார்த்து பெருமை கொள்வதைப் போலவே தம் மொழியோடு இதைப் பொருத்திப் பார்த்து பெருமை கொள்ள ஒவ்வொரு மொழிக்காரனுக்கும் உரிமை உள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்
"எனக்கும்
தமிழ்தான் மூச்சு
ஆனால்
அதை
பிறர் மீது
விடமாட்டேன்"
என்பார் ஞானக்கூத்தன்
நம் மீது தமது மூச்சை பிறர் விடும்போது தான் நாம் கோவப்படுவதே
அப்படித்தான் நம் மீது இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க முற்படும்போது நமக்கு திணிப்பவர்கள் மீது கோவம் வருகிறது
அப்போதும் கூட நமக்கு இந்தியின் மீதோ சமஸ்கிருதத்தின் மீதோ கோவமெல்லாம் வருவதில்லை
இதையெல்லாம் பேசுமளவு சீமான் என்ன சொன்னார்?
கானா பாடல்களால் தமிழ் சிதைகிறது. தமிழை நரிக்குறவர் மொழியாக்கி விடாதீர்கள் என்று சீமான் சொன்னதை தோழர் Mansoor Mohammed அவர்களது நிலைத் தகவலில் பார்க்க முடிந்தது
எந்த மொழியும் தாழ்ந்ததல்ல சீமான்
உமக்கு உம் மொழி என்றால் எமக்கு எம் மொழி என்றுதான் இந்திக்காரர்களைப் பார்த்து நாம் கூறுகிறோம்
இப்போதும் அதையேதான் கூறுகிறோம் 
நமக்கு நம் மொழி என்றால் அவர்களுக்கு அவர்கள் மொழி
நரிக்குறவர்கள் மொழியும் எழுத்து வடிவம் பெறவேண்டும்
அவர்களும் அவர்களது மொழியில் இலக்கியம் படைக்க வேண்டும்
அவர்களது மொழியும் ஆட்சி மொழியாக வேண்டும்
அது என்ன கானாவென்றால் அவ்வளவு கேவலமா சீமான்?
அது ஒரு வடிவம்
அது ஒரு அழகான குடுவை
அவ்வளவுதான்.
அதில் ஊற்றப்படுவது நீரா மதுவா விஷமா என்பதை குடுவை தீர்மானிக்காது
இப்படி ஏடாகூடமாக உணர்ச்சிவசப்பட்டு பேசுவதால் மொழி வளராது
கொஞ்சம் புரிந்துகொண்டு நிதானமாக உரையாடுங்கள் தோழர் சீமான்
#சாமங்கவிந்து 19 நிமிடங்கள்
28.09.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...