Saturday, September 22, 2018

வேசியின் மகனென்றே என்னை அப்போதும் அழைக்கலாம்

மிக நாகரிகமான வார்த்தைகளால் நான் வைக்கும் விமர்சனங்களே அவர்களை கோவப்படுத்துகிறது போல.
"வேசி மகனே" என்றும் இன்னும் மோசமாகவும் ஆரம்பித்திருக்கிறார்கள்
அவர்களிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்க முடியும்
ஆனால் நான் மாறமாட்டேன் தோழா
முகம் காட்டு
நேரில் வா
அனைவரையும் அறிமுகம் செய்து வைக்கிறேன்
உனக்கு என்ன வயதென்று தெரியாது
நீ என் அம்மாவை அழைத்த மாதிரியே என் மனைவியையும் மகளையும்கூட "வேசி" என்றும் அழைக்கலாம்
சத்தியமாய் கோவப்பட மாட்டோம்
அப்போதும் வீட்டில் அனைவரும் அன்பளிப்போம்
குடிக்கிற சூடில் தேநீர் பருகிக் கொண்டே விவாதிப்போம்
அதற்குப் பிறகும் திட்டலாம் நீ
பெயர் சொல்லு
அவசியம் வா தோழா
உன்னைமாதிரிப் பிள்ளைகளை பிஜேபி மாதிரி கட்சிகள் காவுகொள்வதை தடுக்க முடியாத கோவம்தான் எங்கள்மீது எனக்கு
என்ன சொல்ல
நேரில் பார்த்தால் நீ என்னை அப்பா என்றும் அழைக்கக் கூடும்
நீ என்னை வேசியின் மகனென்றே அப்போதுமழைத்தாலும் என்னால் மகனாக மட்டுமே உன்னை கொள்ள முடியும்
மீண்டும் சொல்கிறேன்,
உன்னைமாதிரிப் பிள்ளைகளை பிஜேபி மாதிரி கட்சிகள் காவுகொள்வதை தடுக்க முடியாத கோவம்தான் எங்கள்மீது எனக்கு
அவசியம் வா
#சாமம்கவிந்து ஒரு மணி எட்டு நமிடம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...