இன்று மூன்று விஷயங்களைக் குறித்து எழுத வேண்டும்
ஒன்று நெகிழ்வினைத் தந்தது
மற்றொன்று மகிழ்வினைத் தந்தது
இன்னுமொன்று நம்பிக்கையைத் தந்தது
மற்றொன்று மகிழ்வினைத் தந்தது
இன்னுமொன்று நம்பிக்கையைத் தந்தது
பொதுவாகவே அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கிறார்கள். பொன்னும் மண்ணுமாய் வாங்கிக் குவிக்கிறார்கள். நிமிர்ந்து பார்த்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்பதற்கே ஒரு விலை வைத்திருக்கிறார்கள் என்று விரவிக் கிடக்கிற பொதுப்புத்தியை மறுப்பதற்கு முடியாதவர்களாகவே இருக்கிறோம்.
இன்னும் சிலர் “அந்தக் காலத்துல எல்லாம் எப்படி இருந்தது தெரியுமா?” என்று ஆரம்பித்தார்கள் என்றால் ஏதோ அந்தக் காலத்தில் எல்லாம் லஞ்சமே இல்லாதது போலவும் இப்போது லஞ்சம் இல்லாமல் எதுவுமே இல்லாதது போலவும் ஒரு கருத்தியலை நிறுவ முயற்சிக்கிறார்கள்.
இரண்டுமே பழுதான பார்வையின் விளைவுகள்.
எல்லாக் காலத்திலும் இப்போது இருப்பது போன்றே லஞ்சமும் ஊழலும் இருந்தன. முன்பிருந்ததைப் போலவே இந்தக் காலத்திலும் லஞ்ச லாவன்யம் இல்லாத அதிகாரிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
தனது அலுவலகத்தில் பணிபுரியும் ஆகக் கடைநிலை ஊழியர் கட்டியுள்ள வீட்டை விடவும் சிறிய மற்றும் அவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு சொட்டு ஆடம்பரமும் இல்லாத ஒரு எளிய வீட்டினை எங்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வாங்கியிருக்கிறார்.
இன்று புதுமனைப் புகுவிழா வைத்திருந்தார்.
ஒரு புத்தகத்தைக்கூட யாரும் அன்பளிப்பாகத் தரக்கூடாது என்ற நிபந்தனையோடு அழைத்திருந்தார்.
இப்படி ஒரு நேர்மையான அதிகாரியிடம் வேலை பார்க்கிற வாய்ப்பு எப்போதாவது அமையும்.
எமக்கு இப்போது வாய்த்திருக்கிறது. அந்த வகையில் ஆசிர்வதிக்கப் பட்டிருக்கிறோம்.
”நான் பணி ஒய்வு பெறும் வரைக்கும் இங்கேயே இருந்து தொலைங்க” என்று சொன்னேன்.
என்னைவிடவும் சின்னவர்.
பணி ஓய்வு பெற்றதும் இவர் குறித்து உரிமையோடும் அதிகாரி ஊழியன் தயக்கம் இன்றியும் எழுத ஆசை.
நிச்சயம் எழுதுவேன்.
இது இன்று நெகிழ்வைத் தந்த விஷயம்
***************************************************
Kaakkai Cirakinile இதழில் இந்த மாதம் நான் திரு ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதம் சென்று சேர்ந்திருக்கிறது.
நிறைய தோழர்கள் தம்மோடு இது குறித்து நெகிழ்ச்சியோடு உரையாடுவதாக தோழர் முத்தையா நெகிழ்வோடு அவ்வப்போது தெரிவித்தபடியே இருக்கிறார்.
கவிஞர் வைரமுத்து தோழர் முத்தையாவோடும் என்னோடும் பேசினார். அந்தக் கடிதத்தை படித்ததும் பேசாமல் இருக்கவே முடியவில்லை என்று அவர் கூறினார்.
நான் தஞ்சையிலே நடந்த “கறிச்சோறு” விமர்சனக் கூட்டத்திலே சொன்னதுதான்,
வைரமுத்து என்னோடு பேசியதில் எனக்கொன்றும் இல்லை. ஆனால் அவர் என் படைப்பு குறித்து பேசியது நெசமாகவே மகிழ்ச்சியைத் தந்த விஷயம்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திருமதி சுப்பு லட்சுமி அம்மா பேசினார்கள்.
அய்யா க.திருநாவுக்கரசு பேசினார்.
இன்னும் ஏராளாமான விசாரிப்புகளை அந்தக் கடிஷம் கொண்டுவந்து சேர்த்தது
இவை எல்லாம் கடந்து தம்பி முருக தீட்சண்யா உலகத் தரம் வாய்ந்த கடிதங்களை எல்லாம் இந்தக் கடிதம் அசைபோட வைத்து விட்டதாக ஒரு அழகான பதிவை வைத்திருக்கிறான்.
அந்த அளவில் இந்தக் கடிதம் ஒரு அழகான பதிவை நமக்கு கை ஏந்தி வாங்கித் தந்திருக்கிறது
தம்பி முருக தீட்சண்யாவிற்கு என் நன்றி.
இவற்றால் கொஞ்சம் மகிழ்ந்து போயிருக்கிறேன்.
***********************************
”ரெக்கைகளை
வெட்டி விட்ட்தாய்
சந்தோசப் படுகிறாய்
எனக்கு நடக்கவும் தெரியும்”
வெட்டி விட்ட்தாய்
சந்தோசப் படுகிறாய்
எனக்கு நடக்கவும் தெரியும்”
என்று தம்பி Yazhi Giridharan போகிற போக்கில் எழுதிப் போகிறான்.
இதை யாரேனும் கவிதை இல்லை என்றால் நான் அவர்களோடு பேசுவதை நிறுத்திக் கொள்வேன்.
அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளாலோ அல்லது துரோகத்தினாலோ தற்கொலைக்குத் தயாராகும் ஒருவர் தற்கொலை செய்வதற்கு முன் இதை வாசித்தால் தற்கொலை தவிர்க்கப் படும்.
நிறைய நம்பிக்கையைத் தருகிறாய் யாழி.
இதுமாதிரி அதிகமாய்த் தாருங்கள் பிள்ளைகளே. கொஞ்சம் ஆயுளை நீட்டிக் கொள்கிறோம்.
#சாமங்கவிய 17 நிமிடங்கள்
13.09.2018
13.09.2018
நெகிழ்வு, மகிழ்வு, நம்பிக்கையைத் தந்தவற்றைக் கண்டேன்.
ReplyDeleteமிக்க நன்றிங்க தோழர்
Delete