உச்சநீதிமன்ற தீர்ப்பினையடுத்து பாரதிய ஜனதாக் கட்சியின் கடும் எதிர்பையும் மீறி உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட அளவுநீரைத் திறந்து விடுகிறார் மாண்பமை சீத்தாராமையா அவர்கள்.
இப்படிச் சொல்வதால் சீத்தாராமையா அவர்களுக்கோ கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கோ தண்ணீரைத் திறந்து விடுவதில் முழுமையான உடன்பாடு என்றெல்லாம் பொருளல்ல.
'கனத்த மனதோடு' திறந்து விடுவதாகத்தான் சீத்தாராமையா அவர்களே கூறியுள்ளார்கள்.
ஆக மனதளவில் ஒப்பவில்லை எனினும் உச்சநீதி மன்றத்தின் உத்தரவை அமுல்படுத்துவது என்ற அளவில் கர்நாடாக அரசு வந்திருக்கிறது. ஆளும் கட்சியும் எந்தப் பிரச்சினையிலும் ஈடுபடாமல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கர்நாடகத்தில் இதுவே புதியதும் ஆரோக்கியமானதும் ஆகும்.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படும் ஒரு மாநில அரசிற்கு அதனால் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒததுழைப்பைத் தரவேண்டியது மைய அரசின் கடமையாகும்.
ஆனால் பிரதமரை சந்திப்பதற்கு புதன்கிழமைவரை எரிந்து கொண்டிருக்கும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு புதன்வரை பிரதமர் நேரம் ஒதுக்கவில்லை என்பது கண்டனத்திற்குரியது.
காவிரிப் பிரச்சினையில் பிரதமர் தலையிடுவதற்கு இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும், உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்தி முதல்வரை மனம் போன போக்கில் செயல்படுவதாகவும் மத்திய அமைச்சர் மாண்பமை சதானந்த கௌடா கூறியுள்ளார்.
இது கண்டனத்திற்கு மட்டும் உரியதல்ல.
நிரந்தரத் தீர்விற்கான திட்டமிட அரசோ வெகுஜன அரசியல் கட்சிகளோ ஆர்வம் காட்டாத நேரத்தில் அக்கறையும் இந்த விஷயத்தில் ஞானமும் உள்ளவர்கள் உட்கார்ந்து யோசித்து விவாதித்து ஒரு திட்டத்தை பொது வெளியில் வைத்து பொருத்திப் அபிப்பிராயத்தோடு அரசை நிர்ப்பந்தித்தால் என்ன?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்