“ஏம்மா, திடீர்னு சரவணன்
டாக்டர் எரிக்கறதுக்கு
முன்னாடி எழுந்து
வந்துட்டா எவ்வளவு
நல்லா இருக்கும்”
பொதுவா இவ்வளவு
செண்டிமெண்ட்டா எப்போதுமே
பேசியிராத கீர்த்தனா
இப்படி விக்டோரியாவிடம்
பேசியபோது ஆச்சரியத்தோடு
அவளது கண்களைப்
பார்க்கிறேன், கலங்கியிருக்கின்றன.
விக்டோரியா கண்களும்தான்.
நான் ஏற்கனவே
மாலையைப் போடும்போதும்
அதன்பிறகு இரண்டுமுறையும்
வெடித்தே அழுதிருந்தேன்.
பதினைந்து ஆண்டுகளுக்கும்
மேலாக அவர்தான்
குடும்ப மருத்துவர்.
அநேகமாக அவர்
படித்து வந்ததிலிருந்து.
விக்டோரியாவிற்கும் அவருக்கும்
அப்படி ஒரு
நல்ல பிரியம்.
பத்து வயது
கூடுதலான கிஷோர்தான்
விக்டோரியாவிற்கு சரவணன்.
அவரைக் கேட்காமல்
எந்த ஒரு
மருத்துவமனைக்கும் விக்டோரியா
போனதில்லை.
ஒருமுறை கழுத்திலே
கட்டி வந்து
கடுமையான அவஸ்தை
பட்டபோது திருச்சியில் உள்ள ஒரு பெரிய
மருத்துவமனைக்கு சென்று
அறுவை சிகிச்சைக்கு
அப்பாயின்மெண்ட் எல்லாம்
வாங்கிவிட்டோம். ஒய்ய்வெடுக்க
வேண்டும் என்று
அந்த மருத்துவர்
கூறவே காலாண்டு
விடுமுறையில் போவது
என்று முடிவெடுத்திருந்தோம்.
பணம் வேறு
புரட்ட வேண்டும்.
வழக்கம்போல விக்டோரியா
சரவணனை ஒரு
வார்த்தை கேட்கவேண்டும்
என்று பிடிவாதம்
பிடிக்கவே அவரைப் பார்க்கப் போகிறோம்.
விவரங்களைக் கேட்டதும்
கட்டியை உறுட்டிப்
பார்க்கிறார். “ ஒன்னும்
இல்லீங்க மிஸ்,
நாமலே எடுத்துடலாம்.
அந்த ரூமிற்கு
போங்க “ என்கிறார்.
எஙகள் அனைவரது
முகச்சுளிப்பையும் தாண்டி
விக்டோரியா அடுத்த
அறைக்கு போய்விட நாங்கள்
என்ன செய்வது என்று தெரியாமல்
கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கிறோம்.. சின்னதாய் லோகல் அனெஸ்தீஷியா
கொடுத்து பிதுக்கி எடுத்து
விட்டார்.
”ஒன்னும் இல்ல வேர்வைக்
கட்டிங்க சார்.
உருட்டிப் பார்த்தேன்.
உருண்டது, எனவேதான்
எடுத்துட்டேன் என்றார்.”
ஃபீஸ் எவ்வளவு
என்று கேட்டபோது 800 ரூபாய் என்கிறார். அந்தப் பெரிய மருத்துவ மனையில் அறுவைக்கு மட்டும்
35,000 கேட்டிருந்தார்கள். அதுபோக மருந்து செலவு வேறு. மிகுந்த ஆச்சரியத்தோடு”எப்படி
சார்?” என்கிறேன்.
”அவ்வளவு காஸ்டிலியா
செய்ய நான் என்ன கான்வெண்ட்லயா சார் படிச்சேன், கவர்மெண்டு ஸ்கூலில்தானே சார் படித்தேன்”
என்கிறார்.
அரசுப்பள்ளி
என்ன செய்யும் என்பதை எந்தவிதமான பிரச்சார நெடியும் இல்லாமல் எனக்கு போதித்த அந்த இளைஞன்
இன்று இல்லை.
போய் வாருங்கள்
சரவணன்.
*********************************************************************
கல்வி மேம்பாட்டு
இயக்கத்தின் சார்பிலான ஒரு கலந்துரையாடலில் இருக்கிறேன். முருகனிடமிருந்து அழைப்பு
வருகிறது.
“கூட்டத்தில்
இருக்கிறேன். என்ன விஷயம்? சட்னு சொல்லு”
“நா. முத்துகுமார்
செத்துட்டார். டிவில ஃப்ளாஷ் ஓடுது. அதுதான் கூப்டேன். நீ கூட்டத்தப் பாரு”
விஷயத்தை கூட்டத்திலும்
சொல்கிறேன். அப்படியே எல்லோரும் உறைந்து போகிறார்கள்.
அருமையான பாடலாசிரியன்.
அழகியலோடு இலக்கியத்தின் சாறெடுத்து எளிமைப்படுத்தி காற்றிலே மிதக்க விட்டவன். கலை
இலக்கியத்தை மக்களுக்கானதாக மதித்தவன்.
நண்பர்களுக்கு
ஓடி ஓடி உதவியவன்.
யாரையும் ஒரு
பொருட்டெனப் பார்க்காத வைரமுத்து அவர்களே தவிர்க்கமுடியாத சக்தியாக இருந்தவன்.
அவனோடான எனது
கடைசி சந்திப்பு மிக மிக சின்னது. அவனது ஒரு நீளமான ஒரு பாடலில் வரும் வார்த்தைகளின்
எண்ணிக்கையைவிட ஒன்றிரண்டு வார்த்தைகள் குறைவாகத்தான் இருக்கும்.
கொஞ்சம் கூட
பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
எதை சாதிப்பதற்காக
இப்படி அவசர அவசரமாய் போகிறீர்கள் முத்து.
************************************************************
இன்று பள்ளியில் சுற்றி வரும்போது ஒரு ஆசிரியரற்ற எட்டாம் வகுப்பினொரு பிரிவில் நுழைந்தேன்.
"என்ன பாடம்?"
"சோஷியல்"
"சாரெங்க?"
"எச் எம் சார் கூப்டாங்கன்னு போயிருக்காங்க"
"சரி, நாம கொஞ்சம் பேசலாமா?"
"ஐ, பேசலாமே"
"காந்தி தெரியுமா?" என்று கேட்டு முடிப்பதற்குள் சிலர் 'மஹாத்மா' என்று கத்தினார்கள், சிலர் 'தேசப்பிதா' என்றனர்.
இனி இப்படி சத்தம் போடக்கூடாது விடை தெரிந்தவர்கள் கைதூக்கினால் போதுமென்று நெறிப்படுத்யினேன்.
காந்தி எப்படி இறந்தார்? என்றதும் எல்லோரும் கைதூக்கினார்கள். ஒரு பிள்ளையை சொல்ல சொன்னேன்.
"கோட்சே சுட்டுக் கொனுட்டார், பாவம்" என்றான் ஒரு குழந்தை.
அடுத்து நேரு தெரியுமா என்றதும் ஆசிய ஜோதி, முன்னால் பிரதமர், என்று பதில்கள் வந்தன.
சரிப்பா, நேரு எப்படி செத்தார் தெரியுமா என்றதும் ஒரு பிள்ளை எழுந்து "அவர வெள்ளக்காரங்க தூக்குல போட்டுட்டாங்க" என்றதும் " சார் அவன் சரியாந்திர மக்கு சார் " என்றனர் குழந்தைகள்.
" ஏம்பா மக்குங்குன்னு சொல்றீங்க? "
"தானா செத்தவர தூக்குல போட்டாங்கன்னு சொன்னா மக்குதாங்க சார்" னு சொல்றான்.
மனித வளம்னு சொல்றாங்க பெரியவங்க
****************************************************************************
ஜிம்னாஸ்டிக்கில் நான்காவது இடத்தில் இந்தியா. போதும் மகளே போதும். எங்கள் கிழட்டு உடம்புகளில் திமிறேறிப் போச்சு தாயே.
பார்க்க நாங்கள் இல்லாது போகலாம். ஆனால் உன் மன்னிப்பு கோரல் பதக்கங்களை இந்தியாவும் குவிக்கும் என்ற நம்பிக்கை தந்திருக்கிறது.
அப்பனின் முத்தம் திபா.
********************************************************************
வேண்டுமானால் என்னைச் சுடுங்கள், தலித்துகளை கொல்லாதீர்கள்"
என்று நீங்கள் சொன்னதாக அறிகிறேன் மாண்புமிகு பிரதமர் அவர்களே.
நீங்கள் கோரிய இரண்டையும் அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள் என்பது எனக்கே தெரியும். உங்களுக்குத் தெரியாதா?
தலித்துகளை கொல்லாதீர்கள் என்ற உங்கள் கூற்று தலித்துகளை உங்கள் ஆட்கள் கொல்கிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்கிறது.
எனில் கொலை செய்கிறவர்கள்மீது ஏனின்னும் நடவடிக்கை இல்லை?
தலித்துகள் மீது கைவைத்தால் போலீஸ் சுடும், ராணுவம் சுடுமென்று ஏன் நீங்கள் கூற மறுக்கிறீர்கள்?
அது சரி, தலித்துகளை கொல்லாதீர்களென்கிறீர்களே அவர்கள் இந்து இல்லையா பிரதமர் அவர்களே?
*******************************************************
"cow bakth is
different from cow sevak" என்று மாண்பமை பிரதமர் அவர்கள் மிகுந்த கோபத்தோடு பேசியிருக்கிறார்.
"பசு பக்தி இருக்கலாம் ஆனால் பசுபாதுகாப்பு என்று பெயரில் வெறியாட்டம் போடுவதை சகித்துக் கொள்ள முடியாது"
என்பதாக நகர்ந்த அவரது உரை அத்தோடு நிற்கவில்லை.
பசு பாதுகாப்பு என்ற பெயரால் வெறியாட்டம் போடுபவர்களது கடந்தகால செயல்பாடுகள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் அறிக்கை தயாரித்து தரவேண்டும் என்றும் அவர்கள் பகலில் பசு பாதுகாவலர்களாகவும் இரவில் சமூகவிரோத குற்றவாளிகளாகவும் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்
இவ்வளவு கடுமையான விமர்சனத்திற்கு ஆளானவர்கள் பிரதமரது இயக்கத்தை சேர்ந்தவர்கள்தாம்.
சமூகக் குற்றவாளிகள் என்று தெரிகிறதே பிறகேன் பிரதமர் அவர்களே அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
உனாவில் தலித் மக்கள் மீது ஜாதிய வெறியர்கள் நிகழ்த்திய வன்முறைக்கெதிராக ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியுள்ள குஜராத் பேரணி பிரதமர் அவர்களை தனது சொந்த இயக்கத்தவர்க்கு எதிராகவே இப்படி பேச வைத்துள்ளது.
உனா யாத்திரையும் வரலாறுதான்
********************************************************************
பொம்மைக்காக ஏந்தப்பட்ட
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடவுளை சபித்தபடியே
கடந்து போயினர் இருவரும்
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்
பணத்திற்காக ஏந்தப்பட்ட
மனிதனின் கைகளில் பொம்மையும் விழ
கடாசி எறிந்துவிட்டு
கடவுளை சபித்தபடியே
கடந்து போயினர் இருவரும்
***********************************************************************************************
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்