இந்தக் குழந்தையின் பெயர் விக்னேஷ். பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.
வியாழன் அதிகாலை மதுராந்தகம் அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்திருக்கிறான். அவனோடு அந்த குட்டியானையை ஓட்டிச் சென்ற அவனது அண்ணனும் பக்கத்து வீட்டுப் பையனும் விபத்து நடந்த இடத்திலேயே மரணித்திருக்கிறார்கள்.
சவாரிக்கு போகும்போது பேச்சுத் துணைக்காக அந்த இருவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துப் போயிருக்கிறான்.
இரண்டு குழந்தைகளை ஒரே விபத்தில் அள்ளிக் கொடுத்திருக்கும் அந்தத் தாயைப் பார்த்து ஆறுதல் சொல்லிவர போனோம்.
எங்களைப் பார்த்ததும் வெடித்துக் கதறினார் அந்தத் தாய்.
1. இந்தத் தெருவோட படிப்பாளிப் புள்ளைய சாகக் கொடுத்துட்டேனே
2. சம்பாரிச்சுக் கொடுத்த ஒரு புள்ளையும் போயிட்டானே. இனி இருக்கிற ரெண்டு புள்ளைங்கள எப்படிக் கரையேத்துவேன்
2. சம்பாரிச்சுக் கொடுத்த ஒரு புள்ளையும் போயிட்டானே. இனி இருக்கிற ரெண்டு புள்ளைங்கள எப்படிக் கரையேத்துவேன்
பிசைகிறது.
விக்னேஷ் ரொம்பச் சுமாராகப் படிப்பவன். அவனை அந்தத் தெருவே படிப்பாளிப் பிள்ளை என்றும் தெருவில் இருந்த ஒரே ஒரு ஒரு படிப்பாளிப் பிள்ளையையும் தெரு பலி கொடுத்துவிட்டதாகவும் அழுகிறார்கள்.
யோசித்துப் பார்க்கிறேன்,
ரொம்பச் சுமாராகப் படிக்கிற அந்தக் குழந்தைதான் அந்தத் தெருவின் ஒரே படிப்பாளி என்றால் ‘முதல் தலைமுறை’ அளவைத் தொடவே விக்னேஷ் படித்து ஆளாகி இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் அந்தத் தெருவிலிருந்து பிள்ளைகளை உருவாக்கியிருக்கவோ அல்லது அவனது வெளிச்சத்தில் பிள்ளைகள் தோன்றியிருக்கவோ கூடும்
அந்தத் தெருவின் பதினேழு வருட நம்பிக்கை விக்னேஷ்
யோசிக்க யோசிக்க கலங்குகிறேன்
பொத்தல் கூரையை பாலித்தீன் கவரால் மறைத்திருக்கிறார்கள்.
உதவ நினைத்தவர்கள் சொல்லுங்கள். அவர்களது முகவரியையோ அல்லது வங்கி எண்ணையோ வாங்கித் தருகிறேன்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்