Monday, September 5, 2016

சயின்ஸ் சார் ஸ்டூடண்ட்

எங்க ஊர்ல மூன்று சாருங்க இன்றும் பிரபலம்.
1. எட்டாங்கிளாசு சார் (இவர் 1991 இல் ஓய்வு பெற்றார்)
2. கணக்கு சார் (இவர் ஓய்வு பெற்று ஏறத்தாழ 15 ஆண்டுகள் இருக்கும்)
3. சயின்ஸ் சார் ( இவர் ஓய்வு பெற்றும் பத்து ஆண்டுகளேனும் இருக்கும்)
இப்பவும் எங்க ஊர்ல போய் எட்டாங்கிளாஸ் சார் வீட்டுக்குப் போகனும்னா எங்க வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவார்கள். ஆமாம், நான் எட்டாங்கிளாஸ் சாரோட பெரிய பையந்தான்.
கணக்கு சார் வீட்டுக்கு வழி கேட்டா அவரு ஊர மாத்திட்டு போயி 20 வருஷம் ஆகுது. திருச்சியில இருக்காரு. கருப்பசாமியக் கேட்டா சரியா வழி சொல்வாறும்பாங்க.
சயின்ஸ் சாரக் கேட்டா. சயின்ஸ் சாரக்கா செத்துப் போனதுக்காக ஒரு முட்டு அழுதுட்டு கரூரில் இருக்கும் சார் வீட்டை சொல்வார்கள்.
இவர்கள் மூவரிடமும் படித்த திமிர் எனக்குண்டு எப்போதும்.
அப்பா இல்லாத எனக்கு எப்பவும் எங்க கணக்கு சார்தான் அப்பா.
எங்க சயின்ஸ் சார் ஆங்கில முதுகலை ஆசிரியராக பணி உயர்வு பெற்று தாள் திருத்த வருகிறார். என்ன விஷேசம்னா முதுகலை ஆசிரியர் பணிநிலையில் எங்க சாரவிட நான் ரொம்ப சீனியர்.
ஒரே சீஃப் கிட்ட தாள் திருத்துகிறோம். சீஃப் கு என்னை நன்கு தெரியும்.
எங்க சாரப் பார்த்ததும் பெஞ்சின் நுனியில் அமர்ந்து தாள் திருத்துகிறேன். அதிகப் பழக்க்கம் என்பதால் விரைவில் திருத்திவிட்டு ஓடிவிடுவோம்.
எங்க சார் ரொம்ப தாமதமாத் திருத்தறார்.
எங்க சீஃப் என்னை கூப்பிட்டு உங்க சார் பேப்பரையும் திருத்திவிடுங்க என்கிறார். நானும் என் தாள்களை முடித்துவிட்டு சார் பேப்பரை முடித்து மதிப்பெண் பட்டியல் போட்டுவிட்டு ஓடுகிறேன்.
சாப்பாடு இடைவேளையில் யாருமற்ற பொழுதில் சார் என்னை அழைக்கிறார்.
போகிறேன்.
”உட்காரு”
“இல்ல சொல்லுங்க சார்” ( கைகள் தானாக கட்டிக் கொண்டன)
” இல்ல உக்கார்”
இப்பவும் நுனியில் அமர்கிறேன்
“யாரும் இல்லாதப்ப திட்டனும்னுதான் இப்ப கூப்டேன். பேப்பரே தந்திருக்க மாட்டேன். தப்பு செஞ்சுட்டேன். ஏண்டா கம்னாட்டி என்னடா பேப்பர் திருத்தற. ஒழுங்கா திருத்தனும். அவசரமா திருத்திட்டு ஓடுன முட்டி போடவச்சு தோள உறிச்சுடுவேன் ஆமா”
“தொல”
ஓடிப்போனேன். அப்புறமென்ன அந்த முகாம் முடியும் வரைக்கும் எங்க சார் திருத்தி கொடுத்தபிறகுதான் நகர்வேன்.
என்னன்னம்மோ சொல்றாங்க. இப்ப எனக்கும் உரத்த குரலெடுத்து கத்தனும்போல இருக்கு
சயின்ஸ் சார் ஸ்டூடண்ட்டா

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...