Friday, August 3, 2018

27.07.2018





இன்று Geetha Narayanan மற்றும் Susila Anandஆகியோரது நிலைத் தகவல்களில் நான் இந்தப் படத்தை பார்த்தேன்.

நான் பார்த்த மிக நல்ல பத்து புகைப்படங்களுள் நிச்சயமாய் இதுவும் ஒன்று

நீரின் வருகையை எப்படிக் கொண்டாடுகிறார்கள் பாருங்கள் இந்தத் தாய்மார்கள்?

அந்த மண் எவ்வளவு அழுக்காக இருக்கும் என்பது நதிக்கரைகளைப் பற்றித் தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

எந்தவித அசூசையும் இன்றி அந்த அசுத்தமான இடத்தில் அவர்களால் அங்கு மண்டியிட்டு முத்தமிட முடிகிறது என்றால் அந்த நீரின் முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்று பொருள்.

வாடிய பயிரைக் கண்டதும் வள்ளளார் வருந்தினார் ஆனால் விவசாயி தற்கொலை செய்கிறான். என்ன காரணம் என்றால் வாடியப் பயிர் அவனது பயிர். அவனது தாய்களும் சகோதரிகளும் குழந்தைகளும் இவர்கள்.

எந்த நீர் தங்கள் மண்ணை முத்தமிடாததால் தங்கள் பயிர் வாடியதோ,

எந்தத் தண்ணீர் வராததால் தங்கள் பயிர் வாடியதைக் கண்டு தங்கள் தந்தையை தாத்தனை சகோதரனை இழந்தார்களோ,

அந்தத் தண்ணீர் தம் மண்ணிற்கு வந்த குதூகலம் அவர்களுக்கு,

தம் பயிர் இனி வாடாது இந்தத் தண்ணீர் தம்மை காக்கும் என்ற நம்பிக்கை,

பயிர் வாடாது என்பதால் அந்தக் காரணத்திற்காக தம் குடிசைகளில் இருந்து தற்கொலை நிகழாது என்ற நிம்மதி,

அவர்களுக்குத்தான் தெரியும் ஒவ்வொரு சொட்டு நீரின் முக்கியத்துவம்.

"உழவ ரோதை
மதகோதை
யுடைநீ ரோதை
தண்பதங்கொள்
விழவ ரோதை
சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி”

என்பான் இளங்கோ.

காவிரிநீர் தமிழ் மண்ணை தொடும் பும்புள்ளியில் மதகின் கரைத் தொட்டு ஓடும் நதியின் ஓசையோடு உழவர்கள் மகிழ்ந்து எழுப்பும் ஓசையும் கேட்டு நடக்கும் காவிரியே வாழிய நீ என்பான்.

அந்தக்காலத்து உழவன் மகிழ்ச்சியை ஒத்திருக்கிறது இந்தப் பெண்களின் மகிழ்ச்சி

சொல்ல இரண்டு இருக்கிறது

1) நடந்த காவிரி இப்போது ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஷோலாஷ் காடுகளை அழித்ததால் மலையிலிருந்து மழைநீர் வழக்கமாக இறங்குவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அவகாசத்தைவிட குறைந்த காலத்தில் இறங்கி விடுகிறது.

நதியில் மணல் குறைந்து போனதால் நடந்த நதி ஓட ஆரம்பித்திருக்கிறது. மலையில் ஷோலாஷ் காடுகளை வளர்ப்பதிலும் மணால் கொள்ளையைத் தடுப்பதிலும் முயல வேண்டும்

2) தங்கள் மண்ணை முத்தமிடும் நீரை மண்டியிட்டு முத்த்மிடும் அந்தப் பெண்களிடம் நீர் மேலாண்மையைக் கொடுக்க வேண்டும்

#சாமங்கவிந்து 35 நிமிடங்கழித்து
27.07.2018

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...