“முதன்மையான வாசகனை இழந்து விட்டோம்” என்ற தலைப்பிட்டு வந்திருக்கிறது இன்றைய ‘தீக்கதிர்’.
யோசித்துப் பார்த்தால் இதுதான் இழப்பின் முத்தாய்ப்பான சாரம்.
கலைஞருக்கு பேச வருமா என்றால் யாரைவிடவும் செம்மையாக பேச வரும் என்பதே நமது பதில்.
அவருக்கு கவிதை வருமா என்றால் தமிழ்க் கவிதையை அரசியல் படுத்தியதில் அவரது பங்கு அலாதியானது என்பதே நமது பதில்.
கலைஞருக்கு எழுத வருமா என்று கேட்டால் சட்டென ஒற்றை வரியில் நம்மால் சொல்லிவிட முடியாது
சினிமாவும் காட்சி ஊடகங்களும் வாசகனை ரசிகனாக மாற்றிக் கொண்டிருக்கும்போது ‘பராசக்தி’ வசனம் ரசிகனை வாசகனாகவும் மாற்றியது
ரசித்து ரசித்து வாசித்த வாசகன் கலைஞர்
கருக்கிலேயே அவரது வாசிப்பு தொடங்கிவிடும் என்பது அவரது எழுத்து மீதான காதலுக்கு கட்டியம் கூறுகிறது
அவர் எழுத்தை எவ்வளவு நம்பினார் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்ல வேண்டுமெனில் இதை சொல்லலாம்
நெருக்கடி காலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஊழியர்கள் திரு ஸ்டாலின் உட்பட சிறைப் படுத்தப்பட்டிருக்கின்றனர்
முக்கால்வாசி துருப்பிடித்த துரும்புகளே இவ்வளவு ஆட்டம்போடுகிற வேளையில் முரட்டுத்தனத்தின் மொத்த வடிவமாய் விளங்கிய திருமதி இந்திரா அவர்கள் அவரது கொடூரத்தின் உச்சத்தில் இருந்த நேரம்
அதை எதிர்த்து பேச இயலாது
பத்திரிக்கைத் தணிக்கை அப்போது இரட்டைத் தணிக்கையாக இருந்த நேரம்
பக்கத்தில் தோழர்கள் இல்லாத நேரம்
தனது செய்திகளை மக்களுக்கு எப்படிக் கொண்டுபோவது என்று யோசித்த கலைஞர் தனது கருத்துக்களை துண்டறிக்கைகளை அச்சடித்து ஒரு கையில் தனது கட்சிக் கொடியை பிடித்தபடி அண்ணா சாலையில் நின்று அவற்றை பொது மக்களுக்கு விநியோகித்தார் என்பது வரலாறு
கழியில் கட்டப்பட்ட கட்சிக் கொடியை கையில் பிடித்தபடி துண்டறிக்கைகளை நேற்றுவரை முதல்வராக இருந்த ஒருவர் விநியோகிப்பதை நினைத்துப் பார்க்கிறேன்
என்னை அறியாமல் கண்கள் முட்டுகிறது
தனது எழுத்தை தானே மக்களுக்கு விநியோகித்திருக்கிறார் என்றால் அந்த எழுத்துக்கள் மக்களை களப்படுத்தும் என்ற அவரது நம்பிக்கையைக் காட்டுகிறது
தனது எழுத்து நெருக்கடிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் என்ற அவரது நம்பிக்கை அது
எழுத்தின் மீது வெறிகொண்ட காதலோடு வாழ்ந்த அவர் என் எழுத்தை வாசிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது
ஒரு நூலைக்கூட அவரிடம் கொண்டுபோக முடியவில்லை
குறிப்பாக எனது ”எது கல்வி?” நூலை அவர் வாசிக்க வேண்டும் என்பது என் ரகசிய ஆசையாகவேப் போனது
எத்தனை வாசித்த கலைஞரே என் எழுத்தை வாசிக்காமல் போனது இருவருக்கும் இழப்புதான்
நானாவது தன்னடக்கம் தவிர்த்து என் நூல்களை அவருக்கு கொடுத்திருக்கலாம்
அல்லது அவராவது என் தன்னடக்கம் மறைந்து அவருக்கு என் நூல்களை வழங்கும்வரை சில ஆண்டுகள் வாழ்ந்திருந்து வாசித்துவிட்டுப் போயிருக்கலாம்
#சாமங்கவிய ஒரு மணி ஒன்பது நிமிடங்கள் இருக்கும்போது
பெரும் வாசகனைத்தான் இழந்திருக்கிறோம்
ReplyDeleteஆமாம் தோழர்.
Deleteவலிக்கிறது