கர்நாடகா
அநேகமாக அது ஒரு தேநீர்க் கடை
அளவிற்கு அதிகமான சத்தத்தில் அனுமார் பாடலை கேட்கிறார்
சொல்கிறார்கள்
கேட்க மறுக்கிறார்
சண்டை வருகிறது
தாக்கி விடுகிறார்கள்
இவரும் காவல் நிலையத்தில்,
தான் சத்தமாக பாடலை வைத்துக் கேட்டதால் இவர்கள் தாக்கியதாக புகார் அளிக்கிறார் என்று அரண்செய் மகிழ்நண் ஒரு நேர்காணலில் கூறுகிறார்
இதில் எந்த இடத்திலும் அனுமார் குறித்த பாடல் என்பது பிரச்சினையாக இல்லை
சத்தம்தான் பிரச்சினை
அந்தப் பாடலுக்கு முந்தைய பாடல் அய்யப்பன் பாடலாகவும் இருந்திருக்கலாம் அல்லது ஒரு சினிமா பாடலாகவும் இருந்திருக்கக் கூடும்
அவர்கள் விசாரனை நடத்தி சிலரைக் கைதும் செய்கிறார்கள்
அவர்களில் பெரும்பான்மையோர் இந்துக்கள்
இந்த சத்தப் பிரச்சினையை
கடவுள் பிரச்சினையாக ஒரு மதவெறியர் மாற்ற முயன்றாலே தவறு
இந்தியா என்பது ஒரு குடும்பம் எனில் அந்தக் குடும்பத்தின் தலைவர் நீங்கள்
இவ்வளவு கேவலமாக இறங்குவீர்களா?
அசிங்கமாக இருக்கிறது சார்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்