Wednesday, April 10, 2024

எனில், இந்தியா என்பது என்ன?

 ஏனிப்படி Pro-Dmk வா மாறிப்போன என்று சாடுகிறான்

அவனுக்கிருக்கும் திமுகமீதான ஒவ்வாமைகளில் மிக முக்கியமானது அது தேசிய நீரோட்டத்தின்மீது வெறுப்போடே இருக்கும் என்ற சிந்தனை
இந்தியா என்பது ஒருபோதும் தேசம் அல்ல என்பதையும்
எனவே இந்தியத் தேசியம் என்பதே போலியானது என்பதையும் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொள்கிறான்
ஆனாலும் அவனுக்கு கேள்வி இருக்கிறது
எனில், இந்தியா என்பது என்ன?
இந்தியா என்பது பல தேசியங்களின் ஒன்றியம் என்பதும் அவனுக்குச் சட்டெனப் புரிகிறது
எனில், தேசிய இனங்களின் ஒற்றுமையைத்தான் தேச ஒற்றுமை என்கிறார்களா என்கிறான்
ஆமாம்
அது திமுகவிற்கு இருக்கிறதா?
மணிப்பூர் எரிந்தபோது விளையாட்டுப் பயிற்சி எடுக்க முடியாமல் தவித்த வீரர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுத்தவர் ஸ்டாலின்தான மாப்ள
ஆமாண்டா
அதுதான் ஒற்றுமை
இதுவரை மோடியோ அமித்ஷாவோ மணிப்பூரே போகவில்லைதான
ஆமாம்
இப்ப சொல்லு நாம யாருகூட நிற்க வேண்டும்
திமுகவோடுதான்
அதத்தான் மாப்ள செய்கிறோம்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...