மேற்கு வங்க கல்வி ஆணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு 25,753 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பள்ளி ஊழியர்கள் மேற்கு வங்கப் பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்டனர்
பணி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறது மேற்கு வங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதோடு நில்லாமல் அவர்கள் இதுவரை பெற்று வந்துள்ள ஊதியம் மற்றும் அனைத்து விதமான பணப்பலன்களையும் 12 சதவிகித வட்டியுடன் நான்கு வார காலத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் அது கூறி இருக்கிறது
இதுவரைப் புரிந்துகொள்ள முடிகிறது
இதன் பொருட்டு அரசு ஊழியர்கள் அனைவரும் கோவமாக இருப்பதாக அவர் கூறியுள்ளதைக்கூட நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது
இதனால் பாஜகவிற்கு அவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று சொல்லி இருந்தால்கூட புரிந்து கொள்ளலாம்
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் காரணமாக அரசு ஊழியர்கள் காங்கிரஸ், பாஜக, மற்ரும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளதைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்றுதான் தெரியவில்லை
ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது
இதை அந்த மாநிலத்தின் பள்ளிக் கல்வி ஆணையத்தின் தலைவர் சித்தார்த்த மஜும்தார் கொடுத்துள்ள அறிக்கையில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது
முறைகேடாக பணி அமர்த்தப்பட்ட 5300 பேரின் பட்டியலை உயர் நீதிமன்றத்தில் கொடுத்துள்ளதாகவும்
எஞ்சியுள்ள 19,000 பேர் ஆணையம் வகுத்துள்ள தகுதிகளைப் பெற்ரிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்
நீதியரசர் சந்துரு நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை சரி என்கிறார்
பட்டதாரி ஆசிரியர் சங்கத் தலைவர் மாயவன் தவறு நடந்திருப்பதற்கான வாய்ப்பினை வெளிப்படையாக மறுக்காவிட்டாலும்
உடனடியாக பணத்தைத் திருப்பிச் செலுத்தச் சொல்வது அதிகம் என்பதுபோலக் கூறியுள்ளார்
ஆணையத் தலைவர் சொல்வதைப் பார்த்தால் தவறு நடந்திருக்கிறது
5300 பேர் என்ற அளவில் அவரே ஏற்கிறார்
மீதமுள்ள 19,000 பேரும் முறையாக ப் பணி அமர்த்தப்பட்டதாகக் கூட 26.04.2024 தமிழ் இந்து வெளியிட்டுள்ள தகவல்படி எடுத்துக் கொள்ள முடியாது
இந்த 19,000 பேருக்கும் தகுதி இருக்கலாம் என்கிறார்
இருக்கலாம்தான்
இல்லாமலும் இருக்கலாம்
எனில், அந்த 5300 பேருக்கும் தகுதியும் இல்லை, முறையாகத் தேர்வாகவும் இல்லை
மிச்சமுள்ள நபர்களில் தகுதி இருக்கலாம்
இது ஆணையத் தலைவர் சொல்வதில் இருந்து
எப்படி முறைகேடி
OMR ஷீட்டில் முறைகேடு,
ரேங்க் மாற்றி முறைகேடு
ஊழியர்கள் போராட்டத்தில் இருக்கிறார்கள்
முறைகேடு எனில் உரியவர்கள் கடுமையாத் தண்டிக்கப்பட வேண்டும்
என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்
நியாயமாகப் பணி அமர்த்தப்பட்டவர்கள் பாதுகக்கப்பட வேண்டும்
திரும்பச் செலுத்துவதை உச்சநீதிமன்றம் சொல்லும் வரை நிறுத்தி வைக்கலாம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்