INDIA TODAY
**************
நேற்று வைரலான ஒரு விஷயத்தை இன்று வைக்கும் சுறுசுறுப்பு என்னுடையது
பெங்கலூரு
19 - 22 வயது அளவில்
மைக்கை நீட்டுகிறார்
யாருக்கு, எதற்கு வாக்களிப்பீர்கள்?
ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது. பதவியில் இருக்கும் முதல்வர்களே கைது செய்யப்படுகிறார்கள் என்கிறான் அந்தக் குழந்தை
மைக்கை நீட்டியதும் நம் அளவில் ஒரு குழந்தைதான்
அவர் எதிர்பார்த்த அல்லது விரும்பிய பதிலாக இது இல்லை
எனவே
கைது செய்யப்பட்டவர்களிடம் ஊழல் கறையே இருக்காது என்று நம்புகிறீர்களா? என்று விஷத்தில் நனைத்த காட்பரீசை நீட்டுகிறார்
நானே காட்பரீஸ்தான், எனக்கே காட்பரீசா என்பதாக சிரித்துக் கொண்டே எதிர்கொள்கிறான் அந்தக் குழந்தை
இருங்க, இருங்க அதற்குத்தான் வருகிறேன் என்றவன். அப்படி ஊழல் செய்தவங்க எல்லாம் அந்தக் கட்சிக்குப் போனா உத்தமர்களாக மாறுகிறார்களே எப்படி என்கிறான்
யாருக்கு வாக்கு என்ற அதே கேள்வியோடு இன்னொரு குழந்தையிடம் மைக் நீள்கிறது
இந்த சமூகத்தைப் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆராவாரிக்கிறார்கள் குழந்தைகள்.
பிரிப்பவர்களுக்கு எதிரானது எங்களது வாக்கு என்கிறாள். புரியும்படி சொன்னால் வெறுப்புக்கு இல்லை அன்பிற்குத்தான் எனது வாக்கு என்கிறாள்
குழந்தைகள் ஆரவாரிக்கிறார்கள்
நாம் தெளிவாக இருப்பதாக நினைக்கிறோம்
அந்தக் குழந்தைகளின் ஆரவாரம் சொல்கிறது
ஊழலைவிட வெறுப்பைத்தான் முதலில் அகற்ற வேண்டும்
மைக்கைப் பார்க்கிறேன்
"INDIYA TODAY" என்றிருக்கிறது
இதுதான் இந்தியா இன்னமும் என் அன்பிற்குரிய சார்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்