தென்னிந்தியர்கள் பிரிவினைவாதிகள் என்பது மாதிரி வடக்கே பேசிவிட்டு
இங்கு வந்து ஒன்றுமே தெரியாதது மாதிரி ”ரோட் ஷோ” நடத்துகிறீர்களே
ஒன்று தெரியுமா,
எப்படிப் பேசுவீர்கள் என்பது பற்றியெல்லாம் 107 ஆண்டுகளுக்கு முன்னமே எங்கள் தாத்தன்கள் எங்களுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்
20.08.1917
கோவையில் முதல் பார்ப்பனரல்லாதார் மாநாடு
எம் பாட்டனார் பனகல் அரசர்தான் தலைவர்
”இந்திய நாட்டின் சார்பாகப் பேசும் உரிமையை அவர்களுடையது மட்டுமே என்று கூறும் அவர்கள் நம்மை பிரிவினைவாதிகள் என்று குற்றம் சுமத்துகின்றனர்”
போதுமா சார்,
இன்னொரு தகவலையும் கேட்டுக் கொள்ளுங்கள்
அந்த பனகல் அரசரின் பெயரில் அமைந்துள்ளதுதான் நீங்கள் ஷோவைத் துவக்கிய “பனகல் பார்க்”
போங்க சார் போங்க
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்