Tuesday, April 23, 2024

காந்தியின் கடிதம்

 26.07.1947

அநேகமாக அது ஒரு சனிக்கிழமை
இன்னும் 19 நாட்கள்தான் விடுதலைக்கு
துப்புறவு தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த காந்தி அவ்வளவு பரபரப்பாக இருக்கிறார்
இந்திய பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் முந்தைய நாள் கூட்டாக வெளியிட்டிருந்த அறிக்கையை பத்திரிக்கைகளில் வாசிக்கிறார்
நிறைய சந்திப்புகள்
நிறைய உரையாடுகிறார்
வயது வந்தோர் அனைவருக்குமான வாக்குரிமையின் நல்லவை அல்லவைகள் குறித்து உரையாடுகிறார்
இந்திய தேசிய காங்கிரஸ் செய்ய வேண்டியவை குறித்து உரையாடுகிறார்
இத்தனை கடுமையான பணிகளுக்கும் இடையிலும் இளைஞர் ஒருவருக்கு கடிதம் எழுதுகிறார்
”நீங்கள் எடுத்துப்போன புத்தகத்தை இன்னும் திருப்பித் தரவில்லை. அது இந்த நூலகத்திற்குரியது. உடனடியாகத் திருப்புங்கள்”

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...