Wednesday, April 10, 2024

பதில் இருக்குங்களா அண்ணாமலை சார்

 யாரோ ஒருவனைப் பிடிக்கிறீர்கள்

நீங்கள் எதிர்பார்த்ததை அவன் சொல்லவில்லை
பிணை மறுக்கிறீர்கள்
மீண்டும் விசாரிக்கிறீர்கள்
நீங்கள் எதிர்பார்த்ததை அவன் கூறவில்லை
மீண்டும் பிணையை மறுக்கிறீர்கள்
மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
விடுகிறோம். அவர் பெயரை சொல்வாயா?
ம்
பிணையில் விடுகிறீர்கள்
கெஜ்ரிவாலுக்கு லஞ்சம் கொடுத்ததாகச் சொல்கிறான்
கெஜ்ரிவாலை அழைக்கிறீர்கள்
கைது செய்வீர்கள் என்று அவர் அறிவார்
தேவை எனில் வந்து கைது செய்யட்டும் என்று முடிவெடுத்து வர மறுக்கிறார்
வீடு நுழைகிறீர்கள்
சோதனை இடுகிறீர்கள்
பணம் ஏதும் இல்லை
எந்த ஆதாரமும் சிக்கவில்லை
ஆனாலும்,
உங்களுக்கு கொடுத்ததாகச் சொல்கிறான். ஆகவே கைது செய்கிறோம் என்கிறீர்கள்
ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாயோடு பிடிபடுகிறார்கள்
பிடிபடுபவர்களுள் ஒருவர் நயினாருடைய உறவினர் என்கிறார்கள்
இன்னொருவரிடம் பாஜக அடையாள அட்டை இருக்கிறது
நயினார் அது தனது பணம் இல்லை என்கிறார்
அது உண்மையாகவே இருக்கட்டும்
சிக்கியவர்கள் அவர் பெயரை சொல்கிறார்கள்
சொன்னவன் வாக்குமூலத்தை வைத்து கெஜ்ரிவாலை கைது செய்ய அனுமதிக்கும் தேர்தல் ஆணையம்
நயினாரை ஏன் கைது செய்ய மறுக்கிறது?
பதில் இருக்குங்களா அண்ணாமலை சார்

No comments:

Post a Comment

வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.

தமிழில் டைப் செய்ய Click செய்யவும்

இதை முதலில்.....

அது பார்ப்பனத் திமிர் என்றால் இது இடைசாதித் திமிர்தானே?

அன்பிற்குரிய திரு ஸ்டாலின் அவர்களுக்கு, வணக்கம். தந்தையை இழந்து தவிக்கிற என்பதைவிட ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக உங்களை வழிநடத்திக் கொண்டி...