மேட்டுத் தெரு
குப்பனை
சிக்கனக்காரனென்றுதான்
ஊரே சொல்லும்
சந்தைக்கு
நடந்தே போவான்
நடந்தே திரும்புவான்
இரண்டு மணி செலவழித்து
நான்கு ரூபாய் சேமிப்பான்
முக்கால் மணி நேரம் நடப்பான்
முத்து வீட்டில்
பேப்பர் படித்துவிட்டு
மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
சேமிப்பான் பேப்பர் காசை
மாத்திரை போட்டா
பத்தே நிமிடத்தில் பறந்து போகும்
தலைவலி
சொன்னால்
மாத்திரைக்கு ஒரு ரூபாயா என்பான்
பத்துப் போட்டு
மூன்று நாளில் குணமாவான்
நேரம் செலவழித்து
காசை சேமிக்கும்
மேட்டுத் தெரு
குப்பனை
சிக்கனக்காரனென்றுதான்
ஊரே சொல்லும்
பணத்தின் அருமை புரிந்தவன்
ReplyDeleteதம +1
ஆஹா, மிக்க நன்றி தோழர்
Deleteசந்தைக்கு
ReplyDeleteநடந்தே போவான்
நடந்தே திரும்புவான்
இரண்டு மணி செலவழித்து
நான்கு ரூபாய் சேமிப்பான்
அதாவது வேலை இருக்கோ இல்லையோ தன்னை பிஸியாகவே காட்டிக்கொள்பவர்கள்தான் நேரவிரயத்தை அதிகம் பேசுகிறார்கள். பேருந்தில் அவசரமாய் போய்வந்து பின் டீவி முன்னால் உக்காருவதைவிட காலார நடந்துட்டு வந்தா நாலு விஷ்யங்களை பாத்தாமாதிரியும் ஆச்சு உடலலுக்கும் நல்லதுதானே?
முக்கால் மணி நேரம் நடப்பான்
முத்து வீட்டில்
பேப்பர் படித்துவிட்டு
மீண்டும் ஒரு முக்கால் மணி நடந்து
சேமிப்பான் பேப்பர் காசை
பேப்பர் காசு சேமிக்கப்படுதுங்கறதைவிட ஊருக்குள் இன்னொரு குப்பை சேராமல் தடுக்கப்படுதுங்கறது நல்லதுதானே?
மாத்திரை போட்டா
பத்தே நிமிடத்தில் பறந்து போகும்
தலைவலி
சொன்னால்
மாத்திரைக்கு ஒரு ரூபாயா என்பான்
உடலுக்கு வியாதிகள் நேற்று தொடங்கி இன்று வருவதில்லை அதன் வேர்கள் சில நாட்களுக்குமுன்பே பல காரணங்களால் ஏற்பட்டிருக்கும் அதை பத்து நிமிடத்தில் போக்கிக்கொள்ளவேண்டும் என்பது என்ன நியாயம்?
இதெல்லாம் மேட்டுதெரு குப்பனுக்கு தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது நீங்கள் சொல்வதைவைத்துப் பார்த்தால் மேட்டுதெரு குப்பனுக்கு வெட்டிமுறிக்கும் வேலைஎதுவும் இல்லை என்பதுமட்டும் தெரிகிறது. ( கமண்ட் போடும் எனக்கும்தான் )
தங்களது மேலான கருத்துக்களுக்கு நன்றி தோழர்
Delete