காக்கை இதழ் அச்சுக்குப் போய்விட்டது. அட்டையும் தயாராகிவிட்டது. அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக் கொள்ள எத்தனித்தபோது இந்த மண்ணை நேசிக்கிற எந்த ஒரு மனிதனையும் உலுக்கிப் போடுகிற அந்த செய்தி வருகிறது. ”தோழர் மாயாண்டி பாரதி காலமானார்” இந்த மண்ணின் விடுதலைக்காக சற்றேரக் குறைய இருபது ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
அப்படி ஒருமுறை சிறைப் படுத்தப் பட்டபோது அத்தோடு விதிக்கப் பட்ட அபராதத் தொகையான ஐம்பது ரூபாயைக் கட்ட சொத்து இருக்கிறதா என்று நீதிபதி கேட்டபோது மீனாட்சியம்மன் கோயிலும், மங்கம்மா சத்திரமும் தனது தகப்பன் சொத்தென்றும், பாரத நாடு தனது பாட்டனார் சொத்தென்றும் கூறியவர். அதற்காக சிறையில் சித்திரவதை பட்டவர்.
தோழர் மாயாண்டி பாரதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று கூறி இவர் அளித்த சான்றை ஏற்று ஒருவருக்கு தியாகிகள் பென்ஷன் வழங்கியுள்ளார் நீதியரசர் சந்துரு.
இருபது வருடங்களுக்கும் மேலாக ஜனசக்தியிலும் பிறகு தீக்கதிரிலும் பணியாற்றியவர்.
இருபது வருடங்களுக்கும் மேலாக ஜனசக்தியிலும் பிறகு தீக்கதிரிலும் பணியாற்றியவர்.
ஒரு பை நிறைய மிட்டாய்களோடுதான் வீட்டைவிட்டு வேலைக்கு கிளம்புவாராம். வீட்டு வாசலில் இவருக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்துவிட்டுதான் நகர்வாராம். குழந்தைகளை அப்படி நேசித்தவர்.
மிச்சமிருந்த விரல்களின் எண்ணிக்கையளவு சுதந்திரப் போராட்ட வீரர்களில் இன்னுமொருவரை காலம் களவாண்டுவிட்டது.
இவர் சார்ந்திருந்த இயக்கத்தை கடுமையாக விமர்சிப்பவர்களும் ஏற்றுக் கொண்ட ஆளுமை இவர்.
அவர்குறித்த எந்தத் தகவலும் பாடப் புத்தகங்களில் இல்லை.
அந்தத் தியாகப் பெருமகனுக்கு அஞ்சலியையும் வணக்கத்தையும் செலுத்தும் அதே வேலையில் அவரை எங்களால் இயன்ற அளவு கொண்டு சேர்க்க அவர் குறித்து தெரிந்தவர்கள் பங்களிப்பை அளித்துதவுமாறு வேண்டுகிறோம்
அந்தத் தியாகப் பெருமகனுக்கு அஞ்சலியையும் வணக்கத்தையும் செலுத்தும் அதே வேலையில் அவரை எங்களால் இயன்ற அளவு கொண்டு சேர்க்க அவர் குறித்து தெரிந்தவர்கள் பங்களிப்பை அளித்துதவுமாறு வேண்டுகிறோம்
தியாகப் பெருமகனுக்கு அஞ்சலியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் தோழர்
ReplyDeleteதம +1
மிகப் பெரிய இழப்பு தோழர்
Delete“சாக்லெட்“தலைவர்!
ReplyDeleteஉண்மையிலேயே அந்தக் கள்ளங்கபடமற்ற சிரிப்புக்கு எதையும் ஈடுசெய்ய முடியாது எட்வின்! இங்கொரு கூட்டத்திற்கு வந்தபோது பின்னிரவு ஆனதால், தங்கிச்செல்ல விடுதிவேண்டாம் என்று என் வீட்டுக்கே வந்த இயல்பான மனிதர்அவர். வீட்டுக்கு வந்ததும் என் குழந்தைகளை அழைத்து தன் ஜோல்னாப் பையிலிருந்து சாக்லெட்டுகளை எடுத்து ஆளுக்கு ஒன்று கொடுத்துவிட்டு, எனக்கும் என் மனைவிக்கும் நீட்டினார், சிரித்துக் கொண்டே “என்ன தோழர் இது?” என்று கேடடவுடன் “ஏன் உனக்கு சுகர் இல்லல்ல? (அப்ப இல்ல!) நா இந்தப்பையில எப்பவும் 10,15சாக்லெட் வச்சிருப்பேன் குழந்தைகளை எனக்குப் பிடிக்கும். குழந்தைகளுக்குச் சாக்லெட் புடிக்கும்ல..” என்ற அந்த வித்தியாசமான தலைவனை, நினைவு கூர்ந்த உன் அன்பிற்கு என் வணக்கம் எட்வின். அவரின் நினைவுகளைத் தொகுத்து வெளியிட வேண்டும். நன்றி
பத்து பதினைந்து என்பதைத்தான் நான் பை நிறைய என்று எழுதிவிட்டேன் போல
Deleteஆழ்ந்த இரங்கல்கள்!
ReplyDeleteஈடு செய்ய இயலாத பேரிழப்பு தோழர்
Delete