முன்பு மாண்பமை சிதம்பரம் அவர்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அதே வளர்ச்சி அளவு வாய்ப்பாட்டை இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு மாண்பமை ஜெட்லி அவர்களும் இன்னும் கொஞ்சம் உரக்கவே சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.
வங்கத்து தனி மனிதனின் வருமானத்தைவிட வெறும் ஐம்பது விழுக்காடு மட்டுமே உயர்ந்து நின்ற இந்தியத் தனி மனிதனின் வருமானம் தாராள மயமும் உலக மயமும் வந்து இருபதே ஆண்டுகளில் நூறு சதம் உயர்ந்து நிற்கிறது என்பதும் அவர் அடுக்கக் கூடிய மேன்மைகளுள் ஒன்றாக இருக்கவும் கூடும்.
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய மனிதனின் சராசரி ஆயுளானது வங்கத்து மனிதனின் சராசரி வயதைவிட மூன்று நான்கு வருடங்கள் அதிகம். இப்போது இந்தப் பெருமகனார்கள் குறிப்பிடும் வளர்ச்சிக்குப் பின் வங்கத்து மனிதனைவிட இந்திய மனிதனின் சராசரி ஆயுள் நான்கு குறைந்திருக்கிறது என்கிறார் அமர்த்தியா சென்.
இந்திய தனி மனித ஆயுளில் ஏழு ஆண்டுகளை கபளீகரம் செய்த வளர்ச்சி என்ன வளர்ச்சி?
அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.. There are two sides for the same coin எனும் சொல்லாடலே நினைவிற்க்கு வருகிறது ஐயா..
ReplyDeleteமிக்க நன்றி தோழர்
Deleteகுடும்ப கட்டுபாட்டு திட்டத்தை நடைமுறைப் படுத்தாமையும் அதனால் பூதாகரமாய் வளந்த மக்கள் தொகையும் அவர்களுக்கு உணவு தட்டுபாட்டை நீக்க மனிதன் கண்டுபிடித்த ரசாயன உரங்களும் அந்த உரத்தால் வளர்ந்த பயிர்வகைகளுமே மனிதனின் ஆயுளை குறைத்து விட்டது
ReplyDeleteகருத்திட்டமைக்கு மிக்க நன்றி தோழர்
Delete