அவரையும் இவரையும் சொல்ல த் தேவையே இல்லை. நம்மை வைத்தே உங்களோடு உரையாட முடியும்.
என்னை மிக நல்ல ஆசிரியர்களுள் ஒருவனாகவே என் பிள்ளைகள், சக ஆசிரியர்கள், இதுவரையிலுமுள்ள எனது ஆசிரியர்கள் எல்லோரும் கருதுகிறார்கள். பேசவும் செய்கிறார்கள்.
கல்வித்துறை உயரதிகாரிகள் சிலருக்கும் இதுதான் மதிப்பீடு.
கொஞ்சம் மிகை எனினும் உண்மைதான்
கேட்கிறமாதிரி உரையாற்றுவதாயும், வாசிக்கிற மாதிரி எழுதுவதாகவும் சொல்கிறார்கள். சிலர் நான் நிறையவும் ஆழ்ந்தும் படிப்பதாக சொல்கிறார்கள்.
இவ்வளவு ஏன், கண்டுகொள்ளப்படாத சிந்தனையாளன் என்கிறார்கள்.
ஏறத்தாழ 10 நூல்கள் இதுவரை எழுதியிருக்கிறேன். எல்லாம் சரியாய் போய் சேர்ந்திருக்கின்றன.
இரண்டு நூல்கள் அச்சில்.
தினமணி ஆசிரியர் என்னை சந்திக்க விரும்புவதாக எழுதுகிறார்.
கொஞ்சம் மிகையாய் மதிபிடுகிறார்கள் என்றாலும் இவை உண்மைதான்.
இன்னொரு விஷயம் ஒரு மேல்நிலைப் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியரான நான் இந்த ஜூன் முதல் தலைமை ஆசிரியராக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவும் ஏன் என்றால்,
நான் பத்தாம் வகுப்பில் பெற்ர மதிப்பெண் 311
பன்னிரெண்டாம் வகுப்பில் 575
பன்னிரெண்டாம் வகுப்பில் 575
இவ்வளவு குறைவாக பெற்ர என்னாலே இவ்வளவு முடியும் எனில், என்னைவிட புத்திசாளிகளான உங்களால் எதைக் கடந்தும் பயணிக்க முடியும்
இன்று கிடைக்கும் மதிப்பெண் எதுவாயினும் கொண்டாடுங்கள் குழந்தைகளே.
தேர்ச்சியே இல்லை எனினும் விடுங்கள். இன்ஸ்டண்ட் எழுதிக்கலாம்.
இதை மனதில் வையுங்கள் மக்கு எட்வினால் முடியும் எனில் ஏன் உங்களால் முடியாது?
முடியும் பிள்ளைகளே
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்