நேற்று துர்கா பிரிண்டர்ஸ் தோழர்கள் திரு சரவணன் மற்றும்Kanagasabhapathy Vivekanandan ஆகியிருந்த பார்க்க கீழ்க்கட்டளை நோக்கி சென்று கொண்டிருந்தோம். வேள்வி சிக்னலைக் கடப்பதற்குள் இரண்டுமுறை சிக்னலில் சிக்கினோம்.
அந்தக் கொடிய வெயிலில் சிக்னலில் நிற்கும் வாகனங்களில் இருப்பவர்களிம் பொம்மை, பட்ஸ், கார் துடைப்பான் போன்ற பொருட்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். அத்தகைய சாலை நெரிசலில் அவ்வளவு பாதுகாப்பானது இல்லை அது. ஆபத்தானதென்றே சொல்லலாம்.
வலிக்க வலிக்க நகர்ந்தோம்.
மீண்டும் மாலை வடபழனி சிக்னலிலும் இத்தகைய குழந்தைகளைப் பார்க்க முடிந்தது. மறைவிருந்து ஒரு வடமாநிலப் பெண்மணி சில குழந்தைகளை இயக்குவதைப் பார்க்க முடிந்தது.
இந்தக் குழந்தைகள் சென்னைக் குழந்தைகள்போலத் தெரியவில்லை.
பெற்றோரிடமிருந்து திருடப்பட்ட குழந்தைகளைக் கொண்டு இந்த வியாபாரத்தை யாரோ செய்வதாகத் தோன்றுகிறது.
அங்குள்ளத் தோழர்கள் அருள்கூர்ந்து கவனியுங்களேன்.
நான் சந்தேகப் படுவது சரி எனும் பட்சத்தில் அவர்களை மீட்டு பள்ளிக்கனுப்ப முயற்சிக்கலாம்
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்