அன்பின் நண்பர்களே,
வணக்கம். நலம்தானே?
"எது கல்வி' நூலினை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார் திரு.யுவன். நூல் நன்றாகப் போகிறது என்று மகிழ்வோடு கூறினார்.
இந்த நூல் உருவாக இருவர் காரணமாக இருந்திருக்கிறார்கள்
2015 ஆமாண்டு எனது பிறந்த தினத்தன்று என் முகநூல் பக்கம் வந்து வாழ்த்திய தோழி உமா தினமணி டாட் காமிற்காக ஒரு தொடர் கேட்டார். மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு "முடியும்வரை கல்" என்ற அந்தப் பத்தியைத் தொடங்கினேன்.
2016 ஆமாண்டு எனது பிறந்த நாளன்று அலைபேசியில் என்னை வாழ்த்திய கவிஞர் தம்பி இந்தப் பத்தியை "நற்றிணை" யில் பதிப்பிக்கத் தரவேண்டுமென்றார். இப்போது "எது கல்வி?" வந்திருக்கிறது.
இந்த நூல் இவ்வளவு சிறப்பாக வந்தமைக்கு உமா, தம்பி, திரு யுவன், மற்றும் நற்றிணை தோழர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
யுவன், தம்பி இருவரையும் சந்தித்த பிறகு உமாவைப் பார்க்க அவரது அலுவலகம் போனால் அவரன்று விடுப்பிலிருந்தார்.
அவரைப் பார்த்து நன்றி சொல்வதற்கென்றே ஒருமுறை சென்னை வரவேண்டும் .
தினமணி டாட் காமின் அசோசியேட் எடிட்டர் மகிழ்ச்சியோடு வரவேற்றார். கொஞ்ச நேர உரையாடலுக்குப்பின்னர் இந்த மாதமே மீண்டும் ஒரு பத்தியை தட்டாமல் தொடங்கிய வேண்டுமென்றார்.
எது குறித்து எழுதலாம்?
No comments:
Post a Comment
வணக்கம். வருகைக்கு நன்றி. தங்கள் கருத்துகளை வழங்கவும்.
தமிழில் டைப் செய்ய Click செய்யவும்